This Article is From Dec 12, 2019

நிர்பயா வழக்கில் குற்றவாளி அக்சய் சிங்கின் மரண தண்டனைக்கு எதிரான மனு டிச.17-ல் விசாரணை!!

23-வயதான டெல்லி இளம்பெண் நிர்பயா ஓடும்பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டாள். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 16 நாட்கள் கழித்து அவரது உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

நிர்பயா வழக்கில் குற்றவாளி அக்சய் சிங்கின் மரண தண்டனைக்கு எதிரான மனு டிச.17-ல் விசாரணை!!

டெல்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட நடவடிக்கை தீவிரம் அடைந்து வரும் நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் சிங், தனது தூக்கு தண்டனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு டிசம்பர் 17-ம்தேதி விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சரியாக மதியம் 2 மணிக்கு திறந்தவெளி நீதிமன்றத்தில் வைத்து வழக்கு விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் 14 பக்கங்களைக் கொண்ட இந்த மறு சீராய்வு மனுவில், 'ஆயுள் குறைந்து கொண்டிருக்கும் சூழலில் எதற்காக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்? இது சம்பந்தமாக வேத, புராணங்கள், உபநிஷத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. முன்பெல்லாம் மக்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தனர். இந்த கலியுகத்தில் மனிதரின் வாழ்நாள் குறைந்து 50-60 ஆண்டுகளாக மாறி விட்டது. நிஜ வாழ்க்கையில் ஏராளமான பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் மனிதன், பிணத்தைக் காட்டிலும் மேலானவன் கிடையாது' என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

டெல்லியில் காற்று மாசை சுட்டிக்காட்டி, மோசமான காற்று, அசுத்தம் அடைந்த தண்ணீர் காரணமாக மனிதனின் ஆயுட்காலமே குறைந்து விட்டது. அப்படியிருக்கையில் எதற்காக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 


23-வயதான டெல்லி இளம்பெண் நிர்பயா ஓடும்பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டாள். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 16 நாட்கள் கழித்து அவரது உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

கடந்த 2012 டிசம்பர் 16-ம்தேதி அவரை 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்து, இரும்புக் கம்பியால் சித்தரவதை செய்தனர். பின்னர் ஓடும் பேருந்தில் இருந்து அவரை தள்ளி விட்டனர். 

ஆடையின்றி, ரத்த வெள்ளத்தில் மிதந்த நிர்பயா மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உயிர் கடந்த 2012 டிசம்பர் 29-ல் பிரிந்தது.

இந்த வழக்கில் குற்றவாளியான ராம் சிங் சிறையில் தூக்கிட்டுக் கொண்டார். இன்னொறு குற்றவாளியான சிறுவன் ஒருவனுக்கு 3 ஆண்டுகள் காப்பகத்தில் இருக்க வேண்டும் என்பது தண்டனையாக வழங்கப்பட்டது.

மீதமுள்ள 4 பேரும் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் சிங், தனது தூக்கு தண்டனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு டிசம்பர் 17-ம்தேதி விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

.