This Article is From Feb 20, 2020

சுவரில் மோதிக்கொண்ட நிர்பயா குற்றவாளி; தூக்குத் தண்டனையைத் தள்ளிப்போட முயற்சி?

இந்த வாரத் தொடக்கத்தில், வினய் ஷர்மாவின் வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில்,அவர் "உண்ணாவிரதத்தில்" இருப்பதாகவும், அவரது மனநிலை சரியில்லை என்றும் கூறியிருந்தார்.

சுவரில் மோதிக்கொண்ட நிர்பயா குற்றவாளி; தூக்குத் தண்டனையைத் தள்ளிப்போட முயற்சி?

தனக்கு தானே சுவரில் மோதிக்கொண்ட நிர்பயா குற்றவாளி வினய் ஷர்மா.

New Delhi:

நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா, தூக்குத் தண்டனையைத் தாமதப்படுத்த தனக்குத் தானே சுவரில் மோதிக்கொண்டு காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.  

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது. 

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா, தனது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி குடியரசுத்தலைவருக்குக் கருணை மனு அனுப்பினார். அதனைக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதை எதிர்த்து வினய் ஷர்மா, தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இதற்கிடையே, குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ம் தேதி தூக்கில் போடும்படி புதிய தேதியை டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் செய்துவருகிறது. ஆனால், தண்டனையை ரத்து செய்யவும், தள்ளிப் போடவும் குற்றவாளிகள் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் மேலும் ஒரு முயற்சியாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வினய் ஷர்மா, கடந்த 16ம் தேதியன்று சுவரில் தனது தலையை மோதி காயம் ஏற்படுத்திக்கொண்டுள்ளார். உடனடியாக அவரை மீட்ட சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, முதலுதவி அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக சிறை நிர்வாகம் அளித்துள்ள தகவலில், தூக்குத் தண்டனையைத் தாமதப்படுத்தும் முயற்சியாகக் குற்றவாளி வினய் ஷர்மா, கடந்த 16 ஆம் தேதி, தலையை சுவரில் மோதி தனக்குத் தானே காயத்தை ஏற்படுத்தி இருப்பதாக திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

நல்ல உடல் நலத்துடன் கைதி இருந்தால் மட்டுமே தூக்கு நிறைவேற்றப்படும் என்பதால் தனக்குத் தானே வினய் ஷர்மா காயம் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. 

.