This Article is From Mar 01, 2020

நிர்பயா வழக்கு : மரண தண்டனையை நிறுத்தக்கோரி குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!!

கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்திர ரானா, மார்ச் 2-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நிர்பயா வழக்கு : மரண தண்டனையை நிறுத்தக்கோரி குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!!

குற்றவாளிகள் பவன் குமார் குப்தா, அக்சய் சிங் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3-ம்தேதி தூக்கிலிட திட்டமிடப்பட்டுள்ளது
  • அக்சய் சிங், பவன் குப்தா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
  • மார்ச் 2-க்குள் திகார் சிறை அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவு
New Delhi:

நிர்பயா வழக்கில் இன்னொரு திருப்பமாக, மார்ச்  3-ம்தேதி நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனையை நிறுத்தக்கோரி குற்றவாளிகள் அக்சய் சிங் மற்றும் பவன் குமார் ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்திர ரானா, இதுதொடர்பாக மார்ச் 2-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு திகாரி சிறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

மனுவில் அக்சய் சிங்கின் கருணை மனு குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ளதால் மார்ச் 3-ம் தேதி தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று அவரது வழக்கறிஞர் ஏ.பி.சிங் குறிப்பிட்டுள்ளார். 

முன்பு தாக்கல் செய்த மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தார். அந்த மனுவில் உண்மைத் தகவல்கள் இல்லை என்று வழக்கறிஞர் ஏ.பி. சிங் தெரிவித்தார். 

பவன் குப்தா தனது மனுவில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு நிலுவையில் இருப்பதால் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் அக்சய் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்சய் சிங் ஆகிய 4 பேரையும் மார்ச் 3-ம்தேதி காலை 6 மணிக்குத் தூக்கிலிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குற்றவாளிகளில் 2 பேர் அதனை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருப்பதால், உத்தரவுப்படி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுமா என்பதில் கேள்வி எழுந்திருக்கிறது. 

.