This Article is From Jan 29, 2020

நிர்பயா வழக்கு: குற்றவாளி முகேஷின் மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

முகேஷ் சிங்கின் வழக்கறிஞர் அனைத்து ஆவணங்களும் குடியரசுத் தலைவர் கோவிந்திற்கு அனுப்பப்படவில்லை, எனவே கருணையை நிராகரிப்பதற்கான அவரது முடிவு தன்னிச்சையானது என்று அவர் வாதிட்டார்.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

கருணை மனுவை குடியரசுத்தலைவர் நிராகரித்ததை எதிர்த்து நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது கருணை மனுவை மனதில் கொள்ளாமல், அவசரமாக தனது மனுவை ரத்து செய்துவிட்டார். எனது நிலை குறித்து அவருக்கு தெளிவாக விளக்கப்படவில்லை. சிறையில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்வதாகவும், பல்வேறு சித்தரவதைகளுக்கு ஆளாவதாகவும், சிறை விதிகளை மீறி தனிமைச் சிறைவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றவாளி அந்த மனுவில் கூறியுள்ளார். 

இதையடுத்து, சம்மந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஜனாதிபதி முன்பு சமர்பிக்கப்பட்டதாகவும், ஜனாதிபதியில் முடிவில் தலையிட முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சிறையில் துன்புறுத்தல் அனுபவிப்பதையெல்லாம் கருணைக்கு அடிப்படையாக இருக்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். 

Advertisement

நிர்பயா வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் சிங் மற்றும் பவன் குப்தா ஆகியோர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். 2012-ல் அவர்கள் செய்த குற்றத்துக்காக இந்த தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. பிப்ரவரி 1-ம்தேதி தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வழக்கில் குற்றவாளியான ஒருவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னொருவர் சிறார் என்பதால் அவருக்கு 3 ஆண்டுகள் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். 

முன்னதாக இந்த மாத தொடக்கதில் 2 குற்றவாளிகளின் சீராய்வு மனு டெல்லி நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி 22-ம்தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

Advertisement

இதற்கிடையே, இன்னொரு குற்றவாளி முகேஷ் குமார் சிங் குடியரசு தலைவருக்கு கருணை மனுவை அனுப்பினார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதன் பின்னர், மரண தண்டனை நிறைவேற்றப்படும் தேதி பிப்ரவரி 1 காலை 6 மணி என மாற்றி அமைக்கப்பட்டது. 

முன்னதாக, திகார் சிறை அதிகாரிகள் குடியரசு தலைவரிடம் அனுப்பப்பட்ட கருணை மனுவுக்கு போதிய ஆவணங்கள் ஏதும் அளிக்கவில்லை என்று கூறி குற்றவாளிகள் தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எதிர்த்தரப்பில் குற்றவாளிகள் யுக்திகளை கையாண்டு தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. 

Advertisement

மரண தண்டனை குற்றவாளிகள் இவ்வாறு தங்களுக்கு தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிப்போட, பல்வேறு யுக்திகளை கையாளுகிறார்கள் என்று கருதிய மத்திய அரசு இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியது. மரண தண்டனை கைதிகளின் தண்டனையை நிறைவேற்றுவது குறித்து நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

Advertisement