This Article is From Mar 06, 2020

'மகளைச் சீரழித்தவர்களின் மரணத்தைப் பார்க்க விரும்புகிறேன்' - நிர்பயா தாயார் கண்ணீர் பேட்டி!!

நிர்பயா வழக்கில் நீதி கிடைப்பதற்கு அவரது தாயார் ஆஷா தேவி கடந்த சில ஆண்டுகளாகப் போராடி வருகிறார். குற்றவாளிகளுக்கு மார்ச் 20-ம்தேதி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

'மகளைச் சீரழித்தவர்களின் மரணத்தைப் பார்க்க விரும்புகிறேன்' - நிர்பயா தாயார் கண்ணீர் பேட்டி!!

குற்றவாளிகளுக்கு இன்னும் வாய்ப்பு ஏதும் இருக்கிறதா? அவர்களது மரணத்தை காண விரும்புகிறேன் என்று ஆஷா தேவி கூறியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்
  • 'குற்றவாளிகளுக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன்'
  • '4 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்படும் வரையில் போராட்டம் தொடரும்'
New Delhi:

மகளைச் சீரழித்தவர்களின் மரணத்தைப் பார்க்க விரும்புகிறேன் என்று நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கண்ணீர் மல்கப் பேட்டி அளித்துள்ளார். 2012 டிசம்பரில் நடந்த நாட்டையே உலுக்கிய சம்பவம் தொடர்பாகக் குற்றவாளிகளுக்கு மார்ச் 20-ம்தேதி நீதிமன்றம் தூக்குத் தண்டனையை விதித்துள்ளது. 

இதுகுறித்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

குற்றவாளிகளுக்கு இன்னும் ஏதேனும் சட்ட வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். மார்ச் 20-ம்தேதி குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவர்கள் மரணம் அடையும் வரையில் எனது போராட்டம் தொடரும். 

நிர்பயா உயிரிழக்கும் போது, இதுபோன்ற குற்றங்கள் மறுபடி ஏற்படாத வகையில் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று என்னிடம் கூறினாள். மகளைச் சீரழித்தவர்களின் மரணத்தைப் பார்க்க விரும்புகிறேன். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் மார்ச் 20-ம்தேதி காலை 5.30-க்கு தூக்கிலிடப்படுவார்கள் என்று டெல்லி நீதிமன்றம் புதிய தேதியை அறிவித்திருக்கிறது. 

முன்பு பலமுறை தூக்கிலிடப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்ட போதிலும் குற்றவாளிகள் தங்களுக்குள்ள சட்ட உரிமைகளைப் பயன்படுத்தியதால், குறித்த தேதியில் தண்டனை நிறைவேற்ற முடியாமல் போனது.

இனிமேலும் குற்றவாளிகளுக்குச் சட்ட உரிமைகள் இல்லை என்பதால், வரும் 20-ம்தேதி அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என நம்பப்படுகிறது. 

.