This Article is From Apr 09, 2019

ARIIA தர வரிசை பட்டியல் வெளியிடு! - முதலிடத்தில் ஐஐடி மெட்ராஸ்!!

ARIIA தர வரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் முதல் 10 மிகச்சிறந்த அரசு சார்பு கல்வி நிறுவனங்களில் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது.

ARIIA தர வரிசை பட்டியல் வெளியிடு!  - முதலிடத்தில் ஐஐடி மெட்ராஸ்!!

ARIIA தர வரிசை பட்டியலில் ஐஐடி நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.

New Delhi:

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை ARRIIA எனப்படும்  Atal Rankings of Institutions on Innovation Achievement recognizes institutes  பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் அரசு சார்புடைய கல்வி நிறுவனங்களில் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது. தனியார் பிரிவுகளில் வி.ஐ.டி. கல்வி நிறுவனம் முதலிடத்தை பிடித்திருக்கிறது. 
 ARIIA -யின் தர வரிசைப் பட்டியலில் ஐஐடி நிறுவனங்களே முன்னணியில் உள்ளன. மொத்தம் 6 ஐஐடி நிறுவனங்கள் அரசு சார்பு பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. 

 ARIIA -யின் தர வரிசைப் பட்டியல் (அரசு)

1. ஐஐடி மெட்ராஸ்

2. ஐஐடி பாம்பே

3. ஐஐடி டெல்லி

4. இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் சைன்ஸ் பெங்களூரு

5. ஐஐடி காரக்பூர்

6. இந்தியன் கெமிக்கல் டெக்னாலஜி, மும்பை

7. ஐஐடி கான்பூர்

8. ஐஐடி ரூர்கீ

9. பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்

10. ஐஐடி ஐதராபாத்

 ARIIA -யின் தர வரிசைப் பட்டியல் (தனியார் பிரிவு)

1. வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, வேலூர்

2. கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி, புவனேஸ்வர்

3. எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் அண்டு டெக்னாலஜி, சென்னை

4. ஜே.எஸ்.எஸ். அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் அண்டு ரிசர்ச், மைசூரு

5. வேல் டெக் ரங்கராஜன் டாக்டர். சகுந்தலா ஆர் & டி இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் டெக், சென்னை. 

Click here for more Education News

.