This Article is From Jul 06, 2019

பட்ஜெட் தாக்கலில் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி அசத்திய நிர்மலா!

2019 - 2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது அரசின் முறையான வரி வசூல் கொள்கையைப் பற்றிப் பேசும்போது புறநானூற்று வரிகளை முன்னுதாரணமாக எடுத்துக்கூறி நிர்மலா சீதாராமன் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.

பட்ஜெட் தாக்கலில் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி அசத்திய நிர்மலா!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து மீண்டும் ஆட்சியமைத்தது பாஜக. இதைத் தொடர்ந்து நேற்று, மக்களவையில் 2019-2020-ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, பட்ஜெட் சம்பந்தமக பேசிக் கொண்டிருந்த அவர், திடீரென்று சங்கத் தமிழ் காலத்தையும் நினைவுக் கூர்ந்தார்.

ஒரு நாட்டில் எப்படி வரி வசூல் செய்ய வேண்டும் என்பதை ‘யானை புகுந்த நிலம்' என்ற பிசிராந்தையாரின் கூற்றை மேற்கோள் காட்டி பேசினார். தொடர்ந்து, அந்தப் பாடலை பாடிய அவர்,

காய் நெல்லறுத்துக் கவளம் கொளினே

அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே

பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்

யானை புக்க புலம் போல

தாணும் உண்ணான், உலகமும் கெடுமே”

பாண்டியன் அறிவுடை நம்பிக்கு பிசிராந்தையார் அறிவுரை வழங்கிய அந்தப்பாடலை தமிழில் முன்னுதாரணமாக எடுத்துக்கூறி யானை புகுந்த நிலம் எப்படி பாதிக்கப்படும் என அவர் எடுத்துரைத்தார்.

திடீரென தமிழ் இலக்கணப்பாடலை பேசியதால் தமிழக எம்.பி.க்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, அவருக்கு கைதட்டி பாராட்டுத் தெரிவித்தனர்.

நிர்மலா சீதாராமன் தமிழின் பெருமைக்குரிய புறநானூற்றுப் பாடல்களில் ஒன்றை சமயமறிந்து தனது உரையில் சேர்த்திருப்பது தமிழக மக்கள் மத்தியில் பாராட்டுதலுக்குரியதாகக் கருதப்படுகிறது.

.