Read in English
This Article is From Oct 01, 2018

சர்ஜிக்கல் தாக்குதல் ஏன்? - நிர்மலா சீதாராமன் விளக்கம்

சர்ஜிக்கல் தாக்குதல் நடந்து 2வது ஆண்டை கொண்டாடும் வகையில் ‘பராக்கிரம் பர்வ்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது

Advertisement
இந்தியா

சர்ஜிக்கல் தாக்குதல் நடந்து 2வது ஆண்டை கொண்டாடும் வகையில் ‘பராக்கிரம் பர்வ்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

Bengaluru:

2016 ஆம் ஆண்டு நடந்த சர்ஜிக்கல் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். சர்ஜிக்கல் தாக்குதல் நடந்து 2வது ஆண்டை கொண்டாடும் வகையில் ‘பராக்கிரம் பர்வ்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இது குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து, வீடியோ ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லப்பட்டு வருகிறது. போர் இல்லாத சூழலிலும் நமது ராணுவ வீரர்கள், முகாமிட்டு தங்கியுள்ளனர். இந்நிலையில் முகாமில் புகுந்து, உறங்கிக் கொண்டிருந்த 16 வீரர்களை கொன்று விட்டு பயங்கரவாதிகள் சென்றுள்ளனர் என்றார்

மேலும், அண்டை நாட்டின் உதவி இல்லாமல் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்பில்லை. பாகிஸ்தானிடம் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டாம், இடமளிக்க வேண்டாம் என்று வலியுறுத்தினோம். ஆனால் அந்நாடு கண்டுகொள்ளவில்லை. எனவே சர்ஜிக்கல் தாக்குதலில் இறங்கினோம். அதில் பயங்கரவாதிகளின் பயிற்சி தளங்கள் அழிக்கப்பட்டன. ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றார்.

Advertisement
Advertisement