Nirmala Sitharaman announces measures as part of a mega stimulus amid coronavirus pandemic.
New Delhi: வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளை ஆகியவற்றின் மீதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால் விவசாயிகள் பலன் அடைவார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய பொருளாதாரத்தை மீட்பதற்காக மத்திய அரசு ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் குறித்து 3-வது நாளாக நிதியமைச்சர் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது -
வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளை ஆகியவற்றின் மீதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால் விவசாயிகள் பலன் அடைவார்கள்.
விளை பொருளை வினியோகம் செய்வதில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக ரூபாய் 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஏற்கனவே தக்காளி, வெங்காயம் மற்றும் உருளை பயிருக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் தற்போது காய்கள், பழங்கள் என அனைத்து பயிர்களுக்கும் வழங்கப்பட உள்ளது
இந்தியாவில் பெரும்பாலானோர் விவசாயத்துறையை சார்ந்துதான் இருக்கின்றனர். அனைத்து சவாலான சூழல்களிலும் விவசாயிகள் சிறப்பாக செயல்படுகின்றனர்.
கடந்த 2 மாதங்களாக விவசாயத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொது முடக்கத்தின்போது ரூ. 74,300 கோடி அளவுக்கு அடிப்படை ஆதார விலையில் விவசாய பொருட்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ரூ. 6,400 கோடி நிலுவைத்தொகை பீம யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் கீழ் ரூ. 18,700 கோடி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளது.
விவசாய துறையில் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குளிர்பதன கிடங்குகள் இந்த தொகையின் மூலம் மேம்படுத்தப்படும். வேளாண் துறை, கூட்டுறவு வங்கிகள், வேளாண் உற்பத்தி நிறுவனங்கள், வேளாண் தொடக்க நிறுவனங்கள் இதனால் பலன் அடையும். இந்த 1 லட்சம் கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்பட்டு விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.