This Article is From Mar 02, 2019

மருத்துவமனையில் அபிநந்தனை சந்தித்து நலம்விசாரித்த பாதுகாப்பு அமைச்சர்

Nirmala Sitharaman & Abhinandan: கமாண்டர் அபிநந்தனை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசியதுபோன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் அபிநந்தனை சந்தித்து நலம்விசாரித்த பாதுகாப்பு அமைச்சர்

விமானப்படை மருத்துவமனைக்கு அபிநந்தன் மாற்றப்பட்டுள்ளார்.

New Delhi:

மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனை டெல்லி மருத்துவமனையில் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்தபின்னர் அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. அபிநந்தன் குறித்து பேட்டியளித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒட்டுமொத்த நாடும் அபிநந்தனை எண்ணி பெருமை கொள்வதாக கூறினார்.

பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின்போது பாகிஸ்தான் பிடியில் 60 மணி நேரம் இருந்தது குறித்து அபிநந்தன் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த புதன் கிழமை, பாகிஸ்தான் விமானப்படையுடன் சண்டையிட்ட போது, விங் கமாண்டர் அபினந்தன் சென்ற மிக்-21 ரக போர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால், அபினந்தன் பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் பாராஷூட் மூலம் தரையிறங்கினார். பாகிஸ்தான் ராணுவம், அவரை கைது செய்தது.

அவர் அந்நாட்டு அரசின் பிடியில் சுமார் 60 மணி நேரம் இருந்தார். இதையடுத்து, நேற்று இரவு 9:20 மணி அளவில் இந்தியாவிடம் அபினந்தனை ஒப்படைத்தது பாகிஸ்தான். 

கடந்த 50 ஆண்டுகள் இல்லாத வகையில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகள், சென்ற புதன் கிழமை வான் வழி சண்டையில் ஈடுபட்டன. அதில்தான் அபினந்தன், பாகிஸ்தான் தரப்பிடம் சிக்கினார். இதையடுத்து பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், ‘அமைதியை நிலைநாட்டும் நோக்கில் அபினந்தனை நாங்கள் விடுவிக்கிறோம்' என்று பேசினார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்ற சூழல் சற்றுத் தணிந்துள்ளது. 

.