This Article is From Jan 04, 2019

எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஓட்டம் பிடித்தார் நிர்மலா: ராகுல் தாக்கு

பாராளுமன்றத்தில் நீண்ட உரையை ஆற்றிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராபேல் விவகாரம் குறித்த தனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஓட்டம் பிடித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஓட்டம் பிடித்தார் நிர்மலா: ராகுல் தாக்கு
New Delhi:

 

ராபேல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் அரசு சார்பாக இன்று மக்களவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். 
இதைத்தொடர்ந்து 

பாராளுமன்றத்திற்கு வெளியே பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது, ராபேல் விவகாரம் தொடர்பாக நான் எழுப்பிய எந்த கேள்விக்கும் பாதுகாப்பு அமைச்சர் பதிலளிக்கவில்லை. அவர் அனில் அம்பானியின் பெயரைக் கூட கூறவில்லை. 

மேலும், மக்களவையில் விவாதம் நிறைவை நோக்கி நகர்ந்த தருணத்தில் பாதுகாப்பு அமைச்சரிடம் இரண்டு கேள்விகளை முன்வைத்து அதற்கு ஆம் அல்லது இல்லை என்ற பதில்கள் அளிக்கும் படியும் கேட்டுக்கொண்டதாக ராகுல் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பிரதமர் இந்த விவகாரத்தில் 'பைபாஸ் சர்ஜரி' செய்த போது, அந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்கள் அதாவது விமானப்படைத் தலைவர், பாதுகாப்பு அமைச்சர், செயலர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனரா, ஆம் அல்லது இல்லை என்று கூறுங்கள், என கேள்வி எழுப்பியதாக ராகுல் கூறினார்.

ஆனால் இதற்கு பதிலளிக்காத பாதுகாப்பு அமைச்சர், தன்னை அவமானப்படுத்திவிட்டதாகவும் பொய்யர் என்று அழைத்துவிட்டதாகவும் கூறி ஒரு நாடகத்தை ஆரம்பித்தார் என ராகுல் கூறினார்.

 நாட்டில் உள்ள இளைஞர்களை நிர்மலா சீதாராமன் தவறாக வழிநடத்த முயல்வதாகவும் ராகுல் குற்றஞ்சாட்டினார். 

.