This Article is From Dec 18, 2019

''3 பேருக்கு எனது சொத்துக்கள் சொந்தம்'' - உயில் குறித்து புதிய வீடியோவில் நித்யானந்தா தகவல்

குழந்தைக் கடத்தல், பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, தினமும் சத்சங்கம் மூலம், பக்தர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வருகிறார். அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் மத்திய புலனாய்வு அமைப்புகள் திணறி வருகின்றன.

''3 பேருக்கு எனது சொத்துக்கள் சொந்தம்'' - உயில் குறித்து புதிய வீடியோவில் நித்யானந்தா தகவல்

கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக நித்யானந்தா தகவல் தெரிவித்திருக்கிறார்.

தனது சொத்துக்கள் 3 பேருக்கு மட்டுமே சொந்தம் என்று புதிய வீடியோவில் தெரிவித்துள்ள நித்யானந்தார், அந்த 3பேரில் விவரங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைக் கடத்தல், பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, தினமும் சத்சங்கம் மூலம், பக்தர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வருகிறார். அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் மத்திய புலனாய்வு அமைப்புகள் திணறுகின்றன.

அரசு சார்பில், “நித்தியானந்தா தலைமறைவாக இருக்கிறார்” என்று சொல்லப்பட்டாலும், தினம் ஒரு வீடியோவை ரிலீஸ் செய்து வருகிறார் அவர். அதில் தன்னைத் தேடுபவர்கள் பற்றியும், தன் மீதான குற்றச்சாட்டுகள் பற்றியும் கேலி செய்கிறார். தொடர்ந்து, ‘ஆன்மிக சொற்பொழிவுகளை' ஆற்றி வருகிறார். 

இந்த நிலையில் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் நித்யானந்தா தனது சொத்துக்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் பேசியதாவது-

நான் நீண்ட நாளுக்கு உயிரோடு இருப்பேன். என்றைக்கு உடலை விட்டு உயிர் பிரிகிறதோ, அப்போது எனது உடல் பெங்களூருவில் உள்ள ஆசிரமத்தில், சமாதி செய்விக்கப்பட வேண்டும். மதுரை ஆதீன சன்னிதானங்கள் எந்த முறைப்படி சமாதி செய்விக்கப்படுவார்களோ, அதே முறையில் எனக்கும் செய்விக்கப்பட வேண்டும். 

என்னுடைய உடல் இந்த முறைப்படிதான் ஜீவ சமாதி செய்யப்பட வேண்டும் என்று உயிலில் எழுதியுள்ளேன். மக்கள் எனக்கு கொடுத்த நன்கொடை, அன்பளிப்பு உள்ளிட்ட அனைத்து சொத்துக்களும், திருவண்ணாமலை குரு பரம்பரை, மதுரை குரு பரம்பரை, காஞ்சி குரு பரம்பரை ஆகிய 3 பேருக்கு மட்டுமே சொந்தம் என்று உயிலில் எழுதி வைத்து விட்டேன்.

இவ்வாறு நித்யானந்தா தனது புதிய வீடியோவில் தெரிவித்துள்ளார். 
 

.