This Article is From Jun 15, 2020

சீனா-பாகிஸ்தான் நிலம் இந்தியாவுக்கு தேவையில்லை: அமைதியையே விரும்புகிறோம்: நிதின் கட்கரி

மேலும், இந்தியா அமைதியையும், நட்பையும் மட்டுமே விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

சீனா-பாகிஸ்தான் நிலம் இந்தியாவுக்கு தேவையில்லை: அமைதியையே விரும்புகிறோம்: நிதின் கட்கரி

சீனா-பாகிஸ்தான் நிலம் இந்தியாவுக்கு தேவையில்லை: அமைதியையே விரும்புகிறோம்: நிதின் கட்கரி

Mumbai:

பாகிஸ்தான் நிலத்தையோ அல்லது சீனாவின் நிலத்தையோ விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று இந்தியா விரும்பவில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா அமைதியையும், நட்பையும் மட்டுமே விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

குஜராத்தில் பாஜகவின் 'ஜான் சம்வத்' பேரணியில் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சமீபத்தில் அதன் இரண்டாம் பதவிக் காலத்தின் முதல் ஆண்டை நிறைவு செய்த நரேந்திர மோடியின் பணிகள் குறித்து பேசினார். அப்போது, உள் மற்றும் வெளி பாதுகாப்பு விஷயங்களைக் கையாள்வதன் மூலம் அமைதியைக் கொண்டுவருவதே அதன் மிகப்பெரிய சாதனை என்றார்.|

இது கிட்டத்தட்ட மாவோயிச பிரச்சினையை வென்றெடுப்பதா அல்லது பாகிஸ்தான் ஆதரவளிக்கும் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாப்பதா என்பதை பற்றியது.. நாங்கள் அமைதியை விரும்புகிறோம், வன்முறையை அல்ல, "என்றார். 

இவை வலிமையால் மட்டுமே நிறுவப்படக்கூடியவை. ஆனால் அந்த வலிமை, விரிவாக்கத்திலிருந்து வருவதில்லை, "விரிவாக்கவாதியாக மாறுவதன் மூலம் நாங்கள் இந்தியாவை வலிமையாக்க முடியாது. அமைதியை நிலைநாட்டி இந்தியாவை வலிமையாக்க விரும்புகிறோம்" என்று செய்தி நிறுவனமான பிடிஐ மேற்கோளிட்டுள்ளது.

இதற்காக அவர் ஒரு சில உதாரணங்களை மேற்கோள் காட்டிய அவர், பூட்டான் நிலத்தை இந்தியா ஒருபோதும் கைப்பற்ற முயற்சிக்கவில்லை. 1971ல் பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்ற பிறகும், வங்கதேசத்தில் சுதந்திரமான அரசை நிறுவுவதற்கு இந்தியா உதவியது.

போரை வென்ற பிறகு எங்கள் நாடு ஷேக் முஜிபுர் ரஹ்மானை வங்கதேசத்தின் பிரதமராக்கியது, அதன்பிறகு எங்கள் வீரர்கள் நாட்டிற்கு திரும்பினர்.

"நாங்கள் ஒரு அங்குல நிலத்தை கூட எடுக்கவில்லை. பாகிஸ்தான் அல்லது சீனாவின் நிலத்தை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் விரும்புவது அமைதி, நட்பு, அன்பு மற்றும் ஒன்றாக செயல்படுவதை மட்டுமே" என்று அவர் கூறினார்.

.