This Article is From Jun 01, 2019

''3 ஆண்டுகளில் 125 கோடி மரக்கன்றுகள் நடப்படும்'' : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி!!

3 ஆண்டுகளில் நெடுஞ்சாலை திட்டம் அனைத்தும் நிறைவேற்றி முடிக்கப்படும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.

''3 ஆண்டுகளில் 125 கோடி மரக்கன்றுகள் நடப்படும்'' : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி!!

பிரதமர் மோடியின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய கடுமையாக உழைப்பேன் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Nagpur:


அடுத்து வரும் 3 ஆண்டுகளில் நெடுஞ்சாலை திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றி முடிக்கப்படும் என்றும், 125 கோடி மரக்கன்றுங்கள் நடப்படும் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த நிதின் கட்கரி தற்போது மீண்டும் அதே அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

தினமும் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்படும். தற்போது தினமும் 32 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்படுகின்றன. இந்தப்பணி அதிகரிக்கப்படும். 

 சாலைப் போக்குவரத்தில் சில பணிகளை நாங்கள் முடித்துள்ளோம். அடுத்த 3 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப 125 மரக்கன்றுகளை நடுவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். 

நெடுஞ்சாலை திட்டங்கள் அனைத்தும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றி முடிக்கப்படும்.  சிறு குறு தொழில் துறை நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. பிரதமர் மோடியின் எதிர்பார்ப்புகளை நான் நிறைவேற்றுவேன். இதற்காக கடுமையாக பணியாற்றுவேன். 

மத்திய நீர்வளத்துறை மற்றும் நதிநீர் இணைப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எனது அமைச்சகம் செய்யும். 
இவ்வாறு கட்கரி தெரிவித்தார். நாக்பூர் மக்களவை தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் கட்கரி, கடந்த வியாழன் அன்று மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். 
 

.