বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Jan 13, 2020

CAA குறித்து விவாதம் நடத்த வேண்டும்; NRC தேவையில்லை: நிதிஷ் குமார் அதிரடி

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) குறித்து எந்த கேள்வியும் தேவையில்லை என்ற அவர், அதனை மாநிலத்தில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று உறுதியாக கூறினார்.

Advertisement
இந்தியா Edited by
Patna:

பீகாரில் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு விவாதம் நடைபெற வேண்டும், என்றும் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தேவையில்லை என்றும் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திருத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தும் பாஜக கூட்டணியில் உள்ள முதல் கட்சியாக ஜேடியு உருவெடுத்துள்ளது. 

பீகார் சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் லல்லு யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மதம் சார்ந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து, முதல்வர் நிதிஷ் குமார் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார். 

Advertisement

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) குறித்து எந்த கேள்வியும் தேவையில்லை என்ற அவர், அதனை மாநிலத்தில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று உறுதியாக கூறினார். 

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும், அனைவரும் விரும்பினால், சட்டப்பேரவையிலே சிறப்பு விவாதம் நடத்தலாம் என்று அவர் கூறினார். NRC குறித்து எந்த கேள்வியும் தேவையில்லை என்றும் அவர் கூறினார். 

Advertisement

CAA-NRC பீகாரில் செயல்படுத்தப்படாது என்று ஜேடியு துணைத் தலைவரும், அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் தனது ட்வீட்டரில் நேற்றைய தினம் தெரிவித்ததை தொடர்ந்து, நிதிஷ் குமார் இன்று இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த வருடம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிதிஷ்குமாருக்கு எதிராக ஜேடியு கட்சியின் ஒரு பிரிவினர் பொது வெளியிலும், ஊடகத்திலும் கடும் விமர்சனங்களை எழுப்பினர். தொடர்ந்து, அக்கட்சியின் துணைத் தலைவரான பிராசாந்த் கிஷோர் கட்சியில் இருந்து விலகுவதாகவும் தனது ட்வீட்டரில் தெரிவித்திருந்தார். 

Advertisement