This Article is From Jun 04, 2018

`நிதிஷ் குமார்தான் பிகாரில் பாஸ்..!'- பாஜக-வுக்கு குட்டு வைத்த ஜனதா தளம்

பிகார் மாநிலத்தில் பாஜக-வும், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளமும் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. இந்நிலையில், அவர்கள் உறவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது

`நிதிஷ் குமார்தான் பிகாரில் பாஸ்..!'- பாஜக-வுக்கு குட்டு வைத்த ஜனதா தளம்

நிதிஷ் குமார் கடந்த ஆண்டு லாலு பிரசாத் உடனான உறவை முறித்துக் கொண்டார்

ஹைலைட்ஸ்

  • இந்திய அளவில் நடந்த 10 இடைத்தேர்தலுக்கு பிறகே இந்த நிலைமை
  • இடைத்தேர்தல் அனைத்திலும் பாஜக தோல்வியடைந்துள்ளது
  • நிதிஷ் இன்னும் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை
Patna:

பிகார் மாநிலத்தில் பாஜக-வும், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளமும் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. இந்நிலையில், அவர்கள் உறவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

சில நாட்களுக்கு முன்னர் வட மாநிலங்களில் இருக்கும் பல்வேறு தொகுதிகளின் 10 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்  நடந்தது. இந்த 10 தொகுதிகளிலும் மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக, தோல்விகண்டது. குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் நடந்த இடைத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக தோல்வியடைந்திருப்பது, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், ஜனதா தளத்தின் நிர்வாகிகள் நேற்று பாட்னாவில் இருக்கும் நிதிஷ் குமார் வீட்டில் சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜனதா தளத்தின் பொதுச் செயலாளர் பவன் வர்மா, `நிதிஷ் குமார் தான் பிகார் மாநிலத்தில் பாஸ். அதனால் தான் அவர் இங்கு முதல்வராக இருக்கிறார். பாஜக- ஜனதா தள கூட்டணியில், எங்களுக்குத் தான் அதிக எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள் என்பது நினைவில் இருக்கட்டும்' என்றார். இது டெல்லி அரசியலில் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாஜக- ஜ.த இடையில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது. 

modi

கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த பிகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளமும் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளமும் கூட்டணி வைத்து போட்டி போட்டன. பாஜக தனியாக நின்று இந்தக் கூட்டணியிடம் தோல்வி கண்டது. ஆனால், சென்ற ஆண்டு லாலு பிரசாத் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி கூட்டணியை முறித்துக் கொண்டார் நிதிஷ். இதையடுத்து மீண்டும் பாஜக-வுடன் கூட்டணி வைத்து முதல்வரானார் அவர். 

 
tejashwi yadav

கடந்த 2013 ஆம் ஆண்டு வரை பாஜக கூட்டணியில் தான் இருந்தார் நிதிஷ். அப்போது நரேந்திர மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக நியமித்ததை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவத்து கூட்டணியில் இருந்து வெளியேறினார். ஆனால், லாலுவுடன் ஏற்பட்ட பிளவுக்குப் பின்னர் மீண்டும் பாஜக-வுடன் இணைந்தார். தற்போது, பாஜக-வுடன் மறுபடியும் மோதல் போக்கு நிலவி வருவதாக கூறப்படுகிறது.

ஜனதா தளத்தின் கருத்துக்குப் பிறகு பேசியுள்ள பாஜக, `எங்கள் இரண்டு கட்சிக்கும் இடையில் நல்லறவு நீடிக்கிறது. வதந்திகள் கிளப்பப்படுவது போல எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. எதிர்காலத்தில் தொகுதி பங்கீடு குறித்து எங்கள் கட்சியின் முக்கியத் தலைவர்கள் உட்கார்ந்து பேசி முடிவெடுப்பர்' என்று மட்டும் தெரிவித்துள்ளது.

.