2019 பொதுத் தேர்தலில் பாஜக - நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி
Patna: எதிர்வரும் 2019 மக்களவை தேர்தலில் பாஜகவுடன், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வைக்கவுள்ளது. இதுதொடர்பாக நம்பத் தகுந்த ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் ஆகியோர் 4 வாரங்களுக்கு முன்பு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், சீட்டு பேரம் தொடர்பாகவும் பேசப்பட்டது.
இதில் முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து பாஜகவும், நிதிஷ் குமாரும் கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பீகாரில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் 16 தொகுதிகள் நிதிஷ் குமாருக்கு அளிக்கப்பட உள்ளது. அவரை தவிர்த்து ராம் விலாஸ் பாஸ்வான் கட்சிக்கு 5 சீட்டுகளும், உபேந்திர குஷ்வாஹா கட்சிக்கு 2 சீட்டுகளும் வழங்கப்படவுள்ளது. இந்த தகவலை என்.டி.டி.வி.-க்கு பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கடந்த தேர்தலில் மற்ற கட்சிகளுக்கு அளித்த சீட்டுகளை குறைத்து அவற்றை நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பாஜக வழங்கியுள்ளது. கடந்த தேர்தலில் 22 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. நிதிஷ் குமார் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது.