இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் அபார வெற்றிக்குப் பின் இந்திய சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று அதிகம் பரவி வருகிறது. அது நியூ யார்க், மேன்ஹாட்டனில் ஒருவர் மோடியின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் இந்திய பணக்காரர் 100 டாலர் பணங்களை காற்றில் வீசி எறிவதாகக் காட்டபடுகிறது. மக்களும் ஆர்வமாக அந்தப் பணத்தை சேகரிக்கின்றனர்
இந்த வீடியோ சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ் ஆப்பில் பிரதமர் மோடியின் வெற்றியின் கொண்டாட்டமாக பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இது உண்மையல்ல…
இந்த வீடியோவை அமெரிக்க ராப் பாடகர் தி காட் ஜோ குஷ் தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். தேர்தல் முடிவுகளுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வேறொரு கோணத்தில் எடுக்கப்பட்டது. தூக்கி வீசப்படுவது 100 டாலர் பணமல்ல 5 டாலர் பணம்தான்.
எனவே, இந்திய மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வீடியோவாக சொல்லப்படுவது முற்றிலும் போலிச் செய்தி.
Click for more
trending news