Mamata Banerjee vs CBI: முதல்வர் மம்தா பானர்ஜி காவல் ஆணையர், ராஜீவ் குமாரை பாதுகாத்துள்ளார்.
ஹைலைட்ஸ்
- நிதி நிறுவன மோசடியில் காவல் ஆணையருக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்
- சாரதா, ரோஸ் வேலி நிதி நிறுவன மோசடி வழக்கை ஆனையர் ராஜீவ் குமார் விசாரித்து
- உச்சநீதிமன்ற உத்தரவை ’ஜனநாயகத்தின் வெற்றி’ என மம்தா குறிப்பிட்டுள்ளார்.
New Delhi: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்யக்கூடாது என்றும் ஆனால், ராஜீவ் குமார் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வரும் ராஜீவ் குமார், நிதி நிறுவன மோசடி வழக்குகளை முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறப்பட்டது. இதையடுத்து, நிதி நிறுவன மோசடி வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக விசாரிப்பதற்காகப் பலமுறை சிபிஐ சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் ஆஜராகவில்லை.
இந்நிலையில், ராஜீவ் குமாரை விசாரிப்பதற்காக, அதிகாரிகளில் ஒரு பிரிவினர், ராஜீவ் குமார் இல்லத்துக்கு சென்றனர். அவர்களை அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, சிபிஐ அதிகாரிகளை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனால், மேற்கு வங்காளம் மாநில போலீசாரின் நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை சிபிஐ தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. பின்னர் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டது. மேலும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொல்கத்தா காவல் ஆணையர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று ஒருபோதும் நாங்கள் கூறவில்லை என்றும் அரசியல் ரீதியாக சிபிஐ பயன்படுத்தப்படுவதையே எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.