ரெஹானா பாத்திமா தான் ஒரு ஐயப்ப பக்தர் என்று குறிப்பிட்டுள்ளார்.
Thiruvananthapuram: கடந்த அக்டோபர் மாதத்தில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நுழைய முயன்று பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணியவாதியும், சமூக செயற்பாட்டாளருமான ரெஹானா பாத்திமாவின் முன் ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சமூகவலைதளங்களில் சபரிமலை ஐயப்பன் குறித்த ரெஹானா பாத்திமாவின் பதிவுகள், மத உணர்வுகளை இழிவுபடுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சமூகவலைதளங்களில் இந்து மத உணர்வுகளை இழிவுபடுத்தியதாக ரெஹானா பாத்திமாவின் மீது சபரிமலை சம்ரக்ஷனா சமிதி அக்.20 அன்று அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரெஹானா பாத்திமா கூறும்போது, தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் முன்ஜாமீன் பெற உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டபோது, ஆந்திர மாநில பத்திரிகையாளரும், ரெஹானா பாத்திமாவும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தல் வரை சென்று, கோவிலுக்குள் செல்ல முயன்றார். எனினும், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் கீழே இறக்கப்பட்டனர்.