This Article is From Feb 28, 2020

பெரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இல்லை: உள்துறை அமைச்சகம்

அமைதியையும் சட்ட ஒழுங்கையும் மீட்டெடுக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலை பொறுப்பாக்கியிருந்த உள்துறை அமைச்சகம், அமைதிக்கான வேண்டுகோளையும் விடுத்திருக்கிறது. மேலும் மத்திய அரசு உண்மைக்குப் புறம்பான வதந்திகளை எதையும் நம்பவில்லை.

பெரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இல்லை: உள்துறை அமைச்சகம்

Violence over the citizenship law has hit Delhi since Sunday (File)

New Delhi:

அமைதியையும் சட்ட ஒழுங்கையும் மீட்டெடுக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலை பொறுப்பாக்கியிருந்த உள்துறை அமைச்சகம், அமைதிக்கான வேண்டுகோளையும் விடுத்திருக்கிறது. மேலும் மத்திய அரசு உண்மைக்குப் புறம்பான வதந்திகளை எதையும் நம்பவில்லை.

தேசிய தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இருந்த இரு குழுக்கள் மோதிக்கொண்டதில் 38 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும், 300க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கின்றனர். இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை அமித்ஷா டெல்லியில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா, காவல்துறை கமிஷனர் அமுல்யா பட்நாயக் மற்றும் சிறப்பு ஆணையர் (சட்டம் ஒழுங்கு) எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா உட்பட. மூத்த காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கடந்த 36 மணி நேரத்தில் எந்தவொரு பெரிய பகுதியிலும் எந்தவொரு பெரிய சம்பவமும் பதிவாகவில்லை. பிரிவு 144 இன் கீழ் வெளியிடப்பட்ட பெரிய கூட்டங்களைத் தடைசெய்யும் உத்தரவுகள், நில நிலைமையை மேம்படுத்தும் நோக்கில், வெள்ளிக்கிழமை 10 மணி நேரம் தளர்த்தப்படும் என்று அதிகாரிகளின் குறிப்பிட்டிருக்கின்றனர்.

தலைநகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு எதிர்வினையாற்றுவதில் தாமதமாகச் செயல்பட்டதாகவும், பாஜகவின் கபில் மிஸ்ராஅனுராக் தாக்கூர் மற்றும் பர்வேஷ் வர்மா போன்ற தலைவர்கள் நடத்திய வெறுக்கத்தக்க உரைகள் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய தவறியதற்காக விமர்சிக்கப்பட்ட டெல்லி காவல்துறை, வன்முறையினால் ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர் இழப்புகளுக்கு இதுவரை 48 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வன்முறை குறித்து 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி முரளிதர் புதன் கிழமை கோரியிருந்தார். பாஜக தலைவர்கள் மீது வெறுக்கத்தக்க பேச்சுக்கள் இருப்பதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை.

இதுவரை 500க்கும் அதிகமான சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், துணை ஆணையர் தலைமையில் இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் குற்றங்களை விசாரிக்க அமைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வருகின்றன. இந்நிலையில் விசாரணை தீவிரப்படுத்தப்படும் பட்சத்தில், கைது எண்ணிக்கை அதிகரிக்கும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, "நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள்" உள்துறை அமைச்சகத்தால் ஊக்குவிக்கப்பட்டுள்ளன.

ar99a66

பாதிக்கப்பட்ட இடங்களில் அமைதியை மீட்டெடுக்க காவல்துறையினர் அமைதிக் கூட்டங்களை நடத்தத் தொடங்கியிருக்கின்றனர். குடியிருப்பாளர்கள் சங்கத்தினர் மற்றும் சிவில் சமூக குழுக்கள் 330க்கும் அதிகமானவை அமைக்கப்பட்டிருக்கின்றன.

வடகிழக்கு டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை வன்முறை வெடித்தது. இதில் பங்கெடுத்தவர்கள் கைகளில் துப்பாக்கிகள், இரும்புக் கம்பிகள் மற்றும் தடிகளை ஏந்தியிருந்தனர். காவல்துறையினர், தடை உத்தரவுகளை மீறி நடைப்பபெற்ற பேரணிகளைத் தடுத்து நிறுத்தினர். வன்முறையாளர்கள் சம்பத்தின் போது தங்களது காழ்ப்புணர்ச்சியினை வெளிப்படுத்தி தீ வைப்பது மற்றும், குடியிருப்பாளர்களைப் பயமுறுத்துவது எனப் பல செயல்களில் ஈட்டுப்பட்டிருந்தனர்.

வாட்ஸ்அப் குழுக்கள் குற்றவாளிகளை ஒழுங்கமைக்க உதவியிருக்கலாம் எனத் தெரிவித்திருக்கின்றனர்.

.