தமிழகத்தில் இருந்து எந்தக் குழந்தைகளும் மும்பையிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லபடவில்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
குழந்தை கடத்தல் தொடர்பாக பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை ஒரு வழக்காக விசாரித்து வருகிறது நீதிமன்றம்.
குழந்தை கடத்தல் குறித்து தமிழக ஊடகங்களில், 300-க்கு அதிகமான குழந்தைகள் மாநிலத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளது என்று பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தது. இது குறித்து நீதிமன்றம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது.
அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தனது விளக்கத்தை சமர்பித்தது, ‘போக்ஸோ சட்டத்தின் கீழ் 4,824 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்திலிருந்து எந்த குழந்தையும் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்படவில்லை’ என்று வாதிட்டது.
மேலும் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எமிலியஸிடம், ‘தமிழகத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் குழந்தை காப்பங்கங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதா?’ என்று கேள்வி எழுப்பியது நீதிமன்றம்.
மேலும், அரசு சமர்பித்த அறிக்கையில் திருப்தியில்லை என்று கூறியது நீதிமன்றம்.
தமிழகத்தில் இயங்கி வரும் அனுமதி பெறாத குழந்தைகள் காப்பகம் குறித்து விரிவான அறிக்கையை சமர்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை அக்டோபர் 25-க்கு ஒத்திவைத்தது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)