Read in English
This Article is From Jul 19, 2018

‘சோனியா காந்தி கணக்குல வீக்!’- நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து பாஜக கருத்து

சோனியா காந்தி, ‘எங்களிடம் போதுமான வாக்குகள் இல்லையென்று யார் சொன்னார்?’ என்று பூடகமான கருத்தைத் தெரிவித்துள்ளார்

Advertisement
இந்தியா ,

Highlights

  • எங்களுக்கு பெரும்பான்மை இல்லையென்று யார் சொன்னார், சோனியா
  • பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதாக வெற்றி பெற வாய்ப்பு
  • எங்களுக்கு கூட்டணி கட்சிகளின் முழு ஆதரவு உள்ளது, பாஜக
New Delhi:

மத்தியில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நாடாளுமன்றத்தில் நடக்க உள்ளது. இந்நிலையில், நேற்று சோனியா காந்தி சொன்ன கருத்தை கேலி செய்துள்ளார் மத்திய அமைச்சர் ஆனந்த் குமார்.

கடந்த 15 ஆண்டுகளில் முதன் முறையாக மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இப்போது தான் ஏற்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. 
 

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பாஜக-வுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது. அதற்கு தனியாக 273 சீட்கள் இருக்கின்றன. இது பாதியளவை விட மிக அதிகம். ஆனால், பாஜக-வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை எதிர்கட்சிகளால் எடுக்கப்பட உள்ளது.

அதே நேரத்தில் நேற்று பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சோனியா காந்தி, ‘எங்களிடம் போதுமான வாக்குகள் இல்லையென்று யார் சொன்னார்?’ என்று பூடகமான கருத்தைத் தெரிவித்துள்ளார். 

Advertisement

இதையடுத்து தான் ஆனந்த் குமார், ‘சோனியா காந்தியின் கணக்கு வீக் ஆக இருக்கிறது. இப்படித்தான் அவர் 1996 ஆம் ஆண்டும் கணக்கு போட்டார். அப்போது என்ன நடந்தது என்பது தெரியும். தற்போதும் அதே தப்பைத்தான் செய்கிறார். மோடி அரசுக்கு கூட்டணிக்கு உள்ளேயும் வெளியேயும் பலம் அதிகமாக இருக்கிறது. எங்களுக்கு எல்லா இடத்திலும் ஆதரவு இருப்பது தெரியவரும்’ என்று கூறினார்.

Advertisement