டெல்லி தேர்தலுக்கான பிரசாரத்தில் இதை பேசினார்.
New Delhi: டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி காங்கிரஸ் மற்றும் நகர்ப்புற நக்சல்கள் இந்த குடியுரிமை திருத்த சட்டம் குறித்து வதந்திகளை பரப்பியதாக குற்றம் சாட்டினார்.
மத்திய அரசு தேசிய மக்களின் பதிவேட்டை நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் எதிர்கட்சிகள் கடுமையாக விமர்ச்சித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இருவரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுவின் கருத்தில் முரண்படுவதையும் சுட்டிக்காட்டினார்.
“இந்தியாவின் 130 கோடி குடிமக்களுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். எனது அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து 2014முதல் என்.ஆர்.சி குறித்து எங்கும் எந்த விவாதமும் நடைபெறவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகுதான் அசாமில் செயல்படுத்தப்பட்டது.” என்று கூறினார். 97 நிமிட உரையில் அதில் பெரும்பாலும் என்.ஆர்.சி மற்றும் புதிய குடியுரிமை சட்டத்தினை குறித்தே பேசினார்.
“குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்கள் பரப்பப்படுகின்றன. இந்தியா முழுவதும் என்.ஆர்.சி மிகப்பெரிய செலவினைக் கொண்டது என்று தொலைக்காட்சி நேர்காணலில் கூறிய தலைவர்கள் உள்ளனர். உங்களின் மன ஆற்றலை ஏன் வீணடிக்கிறீர்கள்?” என்றுகூறினார்
நாட்டிலிருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டறிய தேசிய குடிமக்களின் பதிவு, என்.ஆர்.சி அசாமில் நடைமுறைபடுத்தப்பட்டது. அதில் 19 லட்சம் பேரை குடியுரிமையற்றவர்கள் என்று தெரிவித்தது. அவர்களில் பலர் குடியுரிமை நிரூபிக்க முடியவில்லை. பலர் தடுப்பு மையங்களில் உள்ளனர். புதிய குடியுரிமை சட்டம் முஸ்லீம் சமூகத்தினரை மட்டுமே குறிவைத்து வெளியேற்றும் முயற்சி என்று எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஜார்கண்ட் தேர்தல் பேரணியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
குடியுரிமை திருத்த மசோதா வரும் அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கப்படும். அதன்பிறகு குடிமக்களின் தேசிய பதிவு உருவாக்கப்படும். அகதிகள் கவலைப்பட தேவையில்லை. ஊருவல்காரர்கள் கவலைப்பட வேண்டியிருக்கும். காலவரிசை புரிந்து கொள்ளுங்கள் முதலில் குடியுரிமை திருத்த மசோதா பின் தேசிய குடிமக்கள் பதிவேடு என்று தான் செயல்படுத்தப்படும் என்று அமித் ஷா வங்கத்தில் பிரச்சாரம் செய்தார்.
மக்களவை தேர்தலுக்கான பாஜக அறிக்கையில் என்.ஆர்.சியை ஒரு கட்டமாக நாட்டின் பிற பகுதிகளி செயல்படுத்தும் திட்டமும் குறிப்பிடப்பட்டுள்ளது.