This Article is From Mar 13, 2020

''NPR-க்கு ஆவணங்கள் தேவையில்லை; சந்தேக பட்டியலில் யாரும் இடம்பெற மாட்டார்கள்'' : அமித் ஷா

'உங்களுக்குத் தெரிந்த கேள்விக்கு விடையளிக்கலாம். தெரியாதவற்றை விட்டு விடலாம் ' என்று மாநிலங்களவையில் அமித் ஷா இன்று தெரிவித்தார்.

என்.பி.ஆர். குறித்து மாநிலங்களவையில் விளக்கம் அளித்துள்ளார் அமித் ஷா.

New Delhi:

'என்.பி.ஆருக்கு ஆவணங்கள் ஏதும் தேவையில்லை. சந்தேகத்திற்கு இடமானோர் பட்டியலில் யாரும் இடம்பெற மாட்டார்கள்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் இன்று தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவையில் அவர் பேசியதாவது-

என்.பி.ஆர். கணக்கெடுப்பு நடத்தப்படும்போது ஆவணங்கள் ஏதும் மக்கள் அளிக்கத் தேவையில்லை. உங்களிடம் எந்த தகவல் இருக்கிறதோ அதை அளித்தால் மட்டும் போதும். தெரியாத கேள்விகளை நீங்கள் விட்டு விடலாம். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். அமித் ஷா பேசியபோது, சந்தேகத்திற்குரியவர்கள் என்பதைக் குறிக்கும் D (Doubtful) என்ற குறியீடு, ஆவணங்கள் அளிக்காதவர்கள் மீது இடப்படுமா என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்குப் பதில் அளித்த அமித் ஷா, 'சந்தேகத்திற்கிடமானோர் (Doubtful) என்ற பிரிவு என்.பி.ஆரில் இடம்பெறாது. யாரும் அந்தப் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள்' என்று கூறினார். 

.