Read in English
This Article is From Nov 02, 2018

ம.பி.யில் குடிநீர் கிடைக்காததால் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் எச்சரிக்கை!

சுத்தமான நீர் கிடைக்க செய்யவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் உள்ளூர் நிர்வாகத்தை எச்சரித்துள்ளனர்.

Advertisement
இந்தியா

கிராம மக்கள் தண்ணீருக்காக ஐந்து கிலோமீட்டர் வரை நடந்து செல்ல வேண்டியுள்ளது.

Damoh:

மத்திய பிரதேசத்தின் தமோ கிராம மக்கள் சுத்தமான நீர் கிடைக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்கள் சுத்தமான நீர் கிடைக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்க போவதாக உள்ளூர் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அக்கிராமவாசி ஒருவர் ஏ.என்.ஐ-க்கு அளித்த பேட்டியில், கடந்த 30-40 வருடங்களாக சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதி பட்டு வருகிறோம். உள்ளூர் நிர்வாகத்தை பலமுறை அணுகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இந்தமுறை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். என்று தெரிவித்தார்.

மற்றொரு கிராமவாசி கூறுகையில், கோடைகாலங்களில் சுத்தமான நீர் கிடைக்காததால் கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படுவதாக கூறியுள்ளார்.

Advertisement

நீதிபதி, மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.பி அனைவரிடமும் இதுகுறித்து பேசியுள்ளோம். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் மிகவும் சிரமப்பட்டுவருகிறோம். அதனால் இந்த 2019ல் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம் என்று கிராமவாசி கூறினார்.

மத்திய பிரதேசத்தில் நவ.28 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் டிச.11 ஆம் தேதி அறிவிக்கப்படும். இந்த தேர்தல் பாஜகவிற்கும், காங்கிரஸிற்கும் இடையேயான நேரடியான போட்டியாக தெரிகிறது.

Advertisement

மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் நான்காவது முறையாக தனது பதவியை நீட்டிப்பதற்காக முயற்சிக்கும் நிலையில், ம.பியில் 2003ல் இழந்த ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
 

Advertisement