বাংলায় পড়ুন Read in English
This Article is From Dec 14, 2018

''ரஃபேல் விவகாரத்தில் தவறு நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை''- உச்சநீதிமன்றம்

ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்து மத்திய அரசுக்கு நல்ல பலனை அளித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் ரூ. 59,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

Advertisement
இந்தியா ,
New Delhi:

ரஃபேல் விவகாரத்தில் தவறு நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும்இல்லை என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பான கருத்தை தெரிவித்திருக்கிறது. இது மத்திய அரசுக்கு பெரும் நிம்மதியை அளித்திருக்கிறது.

பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய பாஜக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் ரூ. 56 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ரஃபேல் விவகாரத்தில் தவறு நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே செய்யப்பட்டிருந்த ஒப்பந்த தொகையை அதிகரித்து, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் லாபம் அடையும் வகையில் மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் தனியார் நிறுவனம் ஆதாயம் அடைந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று கூறியுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தனது உத்தரவில், '' வழக்கை விசாரித்ததில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. ஊகத்தின் அடிப்படையில் இதுபோன்ற விவகாரங்களில் எங்களால் தலையிட முடியாது.'' என்று கூறியுள்ளனர்.

Advertisement

ரஃபேல் போர் விமானங்களை பெறுவது தொடர்பான ஒப்பந்தத்தில் ரூ. 56 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக மத்திய பாஜக மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கருத்து எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவை அளித்துள்ளது.

Advertisement