பெண் சிசுக்கொலை நடக்கிறது என்பதை இந்த எண்ணிக்கை தெளிவாகக் காட்டுகின்றன (Representational)
Uttarkashi: குழந்தைகளை பாதுகாக்கும் திட்டத்தை பிரதமர் ஊக்கப்படுத்தி வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர காஷி மாவட்டத்தில் 132 கிராமங்களில் இருந்து பிறப்பு தரவுகளின் பாலின விகிதம் கடந்த 3 மாதங்களில் இந்த பகுதிகளில் ஒரு பெண் குழந்தையும் பிறக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
தரவுகளின் படி, கடந்த மூன்று மாதங்களில் இந்த மாவட்டத்தில் 132 கிராமங்களில் 216 குழந்தைகள் பிறந்தன, ஆனால் பிறந்த குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்பது மாவட்ட நிர்வாகத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
“பெண் குழந்தைகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக அல்லது ஒற்றை இலக்க எண்களில் உள்ள பகுதிகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். பிறப்பு விகிதத்தை என்ன பாதிக்கிறது என்பதை கண்டறிய நாங்கள் கண்காணித்து வருகிறோம். இதன் பின்னணியில் உள்ள காரணத்தை அடையாளம் காண விரிவான கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு நடத்தப்படும்” என்று மாவட்ட மாஜிஸ்திரேட் ஆஷிஷ் சவுகான் கூறியுள்ளார். ஆஷா பணியாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் அந்த பகுதிகளில் விழிப்புணர்வை அதிகரிக்கவும் தரவுகள் குறித்த அறிக்கை சமர்பிக்கவும் கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் கங்கோத்ரி சட்டமன்ற உறுப்பினர் கோபால் ராவத்தும் கலந்து கொண்டார்.
சமூக ஆர்வலர் கல்பனா தாக்கூர், ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்பது பெண் சிசுக்கொலை பரவுவதை தெளிவாகக் குறிக்கிறது என்று குற்றம் சாட்டினார். “இந்த கிராமங்களில் எந்தப் பெண் குழந்தையும் பிறக்கவில்லை என்பது தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது. இது மாவட்டத்தில் பெண் சிசுக்கொலை நடப்பதை தெளிவாகக் குறிக்கிறது. அரசாங்கமும் நிர்வாகமும் எதுவும் செய்யவில்லை” என்று அவர் கூறினார்.
மூத்த பத்திரிகையாளர் சிவ் சிங் தன்வால் இந் நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டார். “பாலின விகித தரவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை கேள்வி எழுப்புகின்றன. பெண் சிசுக்கொலை நடக்கிறது என்பதை இந்த எண்ணிக்கை தெளிவாகக் காட்டுகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கூறினார்.