This Article is From Jun 16, 2019

மம்தா பானர்ஜி போராட்டத்தை நிறுத்த நேர்மையான முயற்சி ஏதும் செய்யவில்லை -மருத்துவர்கள் குழு

மம்தா பானர்ஜி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் எஸ்மா சட்டம் பாயாது என்றும் பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மம்தா பானர்ஜி போராட்டத்தை நிறுத்த  நேர்மையான முயற்சி ஏதும் செய்யவில்லை -மருத்துவர்கள் குழு

மருத்துவர்கள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் சந்திப்பை புறக்கணித்தனர்.

ஹைலைட்ஸ்

  • மருத்துவர்கள் போராட்டம் 6 வது நாளாக தொடர்கிறது.
  • மம்தா பானர்ஜியுடனான சந்திப்பை போராட்ட மருத்துவர்கள் புறக்கணித்தனர்
  • மருத்துவர்களின் போராட்டம் மற்ற மாநிலங்களிலும் பரவியது
Kolkata/New Delhi:
  1. நாங்கள் பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளோம் ஆனால் அரசாங்கம் எந்தவித முன்னெடுப்பும் எடுக்கவில்லை என்று இளநிலை மருத்துவர்களின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
  2. மருத்துவர்கள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் சந்திப்பை புறக்கணித்தனர். நேரடியாக என்.ஆர்.எஸ் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மருத்துவர்களை சந்தித்து குறைகளை தீர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
  3. மருத்துவர்கள் சந்திப்பை நிராகரித்த பின்னர். முதலமைச்சர் மம்தா பானர்ஜி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் எஸ்மா சட்டம் பாயாது என்றும் பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
  4. மருத்துவர்களின் போராட்டம் 6 வதுநாளாக தொடர்கிறது. இதனால் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு போராட்டத்திற்கு காரணம் மம்தா பானர்ஜி தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறது.
  5. நலத்துறை அமைச்சர் ஹார்ஸ் வர்தன்  மருத்துவர்கள் போராட்டத்தை கவுரவ பிரச்னையாக்காதீர்கள் என்று மம்தா பானர்ஜிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மருத்துவர்களின் பாதுகாப்புக்கு தனிச்சட்டம் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 
  6. கோல்கத்தா, டார்ஜிலிங், புர்துவான் உள்ளிட்ட மருத்துவ கல்லூரிகளின் துறை தலைவர்கள் உள்ளிட்ட 700 க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இதுவரை ராஜினாமா செய்தள்ளனர். அவர்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தை மேற்குவங்க மருத்துவ கல்லூரி இயக்குனருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களின் அமைப்பும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 
  7.  ஜூன் 10 ம் தேதியன்று கோல்கத்தா என்ஆர்எஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் மீது உயிரிழந்தவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியதில் 2 பேர் படுகாயம் அடைந்ததை அடுத்து டாக்டர்களின் போராட்டம் தீவிரமடைந்தது குறிப்பிடத்தக்கது

.