This Article is From Dec 20, 2019

தேசிய குடிமக்கள் பதிவேடு முறையை உடனடியாக செயல்படுத்தும் திட்டம் ஏதுமில்லை - அமித் ஷாவின் துணை அமைச்சர் தகவல்

“நாட்டில் இயல்பு நிலை மீட்டமைக்கப்பட்டவுடன் குடியுரிமை திருத்த சட்டத்தின் வரைவில் விதிகளை வகுப்பதற்கு முன் மத்திய அரசு அனைவரிடமும் பேசும்” என்றார்

தேசிய குடிமக்கள் பதிவேடு எப்போது கொண்டுவரப்படும் என்பது குறித்து வரைவு ஏதும் தயாரிக்கப்படவில்லை-ஜிகே ரெட்டி

ஹைலைட்ஸ்

  • Minister of State G Kishan Reddy said no timeline yet for nationwide NRC
  • No draft made yet nor has the cabinet approved it, he told NDTV
  • Amit Shah had said NRC will be implemented across India before 2024 polls
New Delhi:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவும் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் மென்மையான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளார். 

மத்திய அரசு நாடு முழுவதுக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டினை செயல்படுத்தும் உடனடித் திட்டங்கள் ஏதும் இல்லை என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சர் ஜி.கே. ரெட்டி எதிர்க்கட்சிகள் புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைத் தூண்டுவதாக குற்றம் சாட்டினார். நாடு முழுவதும் குடிமக்கள் பட்டியலை அமல்படுத்துவதற்கான காலக்கெடு இன்னும் வடிவமைப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். 

“தேசிய குடிமக்கள் பதிவேடு எப்போது கொண்டுவரப்படும் என்பது குறித்து வரைவு ஏதும் தயாரிக்கப்படவில்லை என்றும் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை” என்று மத்திய உள்துறை துணை அமைச்சர் NDTVயிடம் தெரிவித்துள்ளார். 

குடிமக்கள் திருத்த சட்டத்தை ஆதரித்ததோடு இந்தி மற்றும் உருது பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் எதிர்கட்சிகளை தவறான பிரச்சாரத்தை மாற்ற உதவும் என்றார். 

குடியுரிமை திருத்த சட்டம் 2019க்கான விதிகள் இன்னும் வரைவு செய்யப்படவில்லை. அவை உள்துறை அமைச்சகத்தால் வழங்க சிறிது காலம் எடுக்கும். குடியுரிமை திருத்த சட்டத்திற்கான விதிமுறைகளையும் விதிகளையும் வெளியிடுவதற்கு முன் இந்த மையம் அனைத்து பங்குதாரர்களுடன் உரையாடலை நடத்தும் என்றார். 

“நாட்டில் இயல்பு நிலை மீட்டமைக்கப்பட்டவுடன் குடியுரிமை திருத்த சட்டத்தின் வரைவில் விதிகளை வகுப்பதற்கு முன் மத்திய அரசு அனைவரிடமும் பேசும்” என்றார்

மத்திய உள்துறை இளைய அமைச்சரின் கருத்து மூத்த அமைச்சரான அமித் ஷாவின் கருத்துக்களுக்கு முரணானது. இந்த மாத தொடக்கத்தில் ஜார்கண்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா  2024 தேர்தலுக்கு முன்னர் நாடு முழுவதும் என்.ஆர்.சி செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். 

“2024ஆம் ஆண்டில் நாட்டின் தேர்தலுக்கு செல்வதற்கு முன்னர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவைரும் வெளியேற்றப்படுவார்கள் என்று உறுதியளிக்கிறேன்” என்று அமித் ஷா கூறியிருந்தார். 

குடியுரிமை திருத்த சட்டத்தின் பின்னணியில் என்.ஆர்.சி  முஸ்லிம்களை குறிவைக்கும் கருவியாக பயன்படுத்தப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களை இந்திய குடிமக்களாக மாற்ற உதவுகிறது. புதிய சட்டத்தின் கீழ் மற்றவர்கள் குடியுரிமை பெறுவதால் என்.ஆர்.சி குடியுரிமை பதிவேடு பெரும்பாலும் முஸ்லிம்களை விரட்டும் என்று விமர்சகர்கள் தெர்விக்கின்றனர். 

அசாமில், ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட என்.ஆர்.சி சர்ச்சைக்குரியதாக மாற்றியது. மார்ச் 24,1971 உடன் புதிய குடிமக்கள் பட்டியிலிருந்து 19 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது 

.