This Article is From Mar 03, 2020

பி.இ., எம்.பி.ஏ. படித்தும் வேலையில்லை! கார் பார்க்கிங் அட்டெண்ட் செய்யும் பட்டதாரிகள்!!

கல்வித் தரம் குறைந்திருப்பதுதான் திறமையற்ற இளைஞர்கள் அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் என்று வல்லுநர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தகுதி குறைந்த 50 பணியிடங்களுக்கு அதிக தகுதி மிக்க 1500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • B.E., MBA பட்டதாரிகள் சிலர் பார்க்கிங் அட்டெண்டராக பணியாற்றுகின்றனர்
  • கல்வித் தரம் குறைந்து விட்டதாக விமர்சனங்கள் எழுகின்றன.
  • வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை தமிழக அரசு மறுத்துள்ளது
Chennai:

அதிகம் படித்தும் தகுதி வாய்ந்த வேலை கிடைக்காதது தற்போது அதிகரித்து வருகிறது. பி.இ., எம்.பி.ஏ. படித்தும் வேலையில்லாத பட்டதாரிகள் சிலர் வாகனங்களை பார்க்கிங் அட்டெண்ட் செய்யும் பணியைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.

பொறியியல் பட்டதாரியான 21 வயதாகும் ஆதித்யா, சென்னை பாண்டி பஜாரில் கார் பார்க்கிங் அட்டெண்டராக பணியாற்றி வருகிறார். இது சென்னை கார்ப்பரேஷனின் ஸ்மார்ட் கார் பார்க்கிங் ஆப்-யை புரொமோட் செய்யும் பணிகளில் ஒன்று. அவருக்கு மாதம் ரூ. 18 ஆயிரம் சம்பளம். 

இந்த பணிக்குத் தகுதியாக 10-ம் வகுப்பு படிப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பணியில் சுமார் 50 எஞ்சினியரிங், எம்.பி.ஏ. படித்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுகுறித்து ஆதித்யா கூறுகையில், '10-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு வந்தால் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதற்கு 4 - 5 மணி நேரம் ஆகும். ஆனால் நாங்கள் 2 - 3 நிமிடங்களில் இதன் தொழில் நுட்பத்தைப் புரிந்து கொள்வோம்' என்று தெரிவித்தார்.

இதேபோன்று ராஜேஷ் என்ற 21 வயது எம்.பி.ஏ. பட்டதாரியும் டீம் லீடராக பணியில் சேர்ந்துள்ளார். அவர் முன்பு பணியாற்றிய நிறுவனம் மூடப்பட்டு விட்டது. இதையடுத்து தனது சம்பளத்தில் 55 சதவீதத்தைக் குறைத்துக்கொண்டு அவர் இந்தப் பணியில் சேர்ந்திருக்கிறார். அவரது வருமானத்தை மட்டுமே நம்பி அவரது வீடு உள்ளது.

'கல்லூரியில் எம்.பி.ஏ. பி.இ. படித்த பின்னர் வேலை கிடைக்கவில்லை. 10 ஆயிரத்திற்குக் குறைவாகச் சம்பளம் வாங்குவதற்கு மக்கள் தயாராக உள்ளனர்' என்கிறார் ராஜேஷ்.

தகுதி குறைந்த 50 பணியிடங்களுக்கு அதிக தகுதி மிக்க 1500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

எஸ்.எஸ். டெக் அண்டு மீடியா சர்வீசஸின் உதவி திட்ட மேலாளர் ரிஸ்வான காது கூறுகையில், விண்ணப்பித்த 1000 பேரில் 50 பேரை மட்டும் தேர்வு செய்து அவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம் என்றார்.

கடந்த ஆண்டு 4,600 பொறியாளர்கள், எம்.பி.ஏ. படித்தவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14 துப்புரவாவார்கள் பணிக்கு விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, வேலை வாய்ப்பை ஏற்படுத்தவில்லை என்ற விமர்சனத்தை மாநில அரசு மறுத்துள்ளது.

தமிழக மீன்வள மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,'தொழில் தொடங்குவதற்கு ஏற்ற அனைத்தும் தமிழகத்தில் உள்ளன. அதற்கான திட்டத்தையும் அரசு ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எல்லோரும் அரசுப் பணியை விரும்புகின்றனர். ஏனென்றால் அந்தப் பணி பாதுகாப்பானது. 5 ஆண்டுகளில் 60 லட்சம் பேருக்கு அரசுப் பணியை வழங்க முடியுமா?' என்று தெரிவித்துள்ளார்.

.