This Article is From Apr 07, 2019

எத்தனை பாலியல் வன்கொடுமை நடந்தாலும் பரவாயில்லை: பிரேமலதா சர்ச்சை பேச்சு!

அண்மையில் ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில், அமைச்சர் விஜயபாஸ்கரை அருகில் வைத்துக்கொண்டே ‘குட்கா புகழ் விஜயபாஸ்கர்’ எனக் கூறினார்.

எத்தனை பாலியல் வன்கொடுமை நடந்தாலும் பரவாயில்லை: பிரேமலதா சர்ச்சை பேச்சு!

பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை பிரேமலதா


எத்தனை பாலியல் வன்கொடுமை நடந்தாலும் பரவாயில்லை எங்கள் கூட்டணிக்கு வாக்களியுளங்கள் என்று கூறி தேமுதிக பொருளாளர் பிரேமலதா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.11ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றுள்ளன. இதேபோல், அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு, வட சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். தொடர்ந்து தேர்தல் தேதி நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் தங்கள் கட்சி, கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பிரசாரத்தில் பேசிய பிரேமலதா, பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்பது போல் பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதேபோல், அண்மையில் ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில், அமைச்சர் விஜயபாஸ்கரை அருகில் வைத்துக்கொண்டே ‘குட்கா புகழ் விஜயபாஸ்கர்' எனக் கூறி சர்ச்சைய கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

.