Read in English
This Article is From Apr 21, 2019

‘’2014 தேர்தலில் மோடி அலை இருந்தது; இப்போது அலை இல்லை’’ : சசிதரூர்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் போட்டியிடுகிறார். ஏற்கனவே 2 முறை அவர் இந்த தொகுதியின் எம்.பி.யாக. இருந்திருக்கிறார்.

Advertisement
இந்தியா Edited by

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் போட்டியிடுகிறார். ஏற்கனவே 2 முறை அவர் இந்த தொகுதியின் எம்.பி.யாக. இருந்திருக்கிறார்.

Thiruvananthapuram:

2014 மக்களவை தேர்தலில் மோடி அலை இருந்தது என்பதோ உண்மைதான். இப்போது அந்த அலை இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் சசி தரூர் போட்டியிடுகிறார். ஏற்கனவே அவர் இங்கு 2-வது முறையாக எம்.பி.யாக இருக்கிறார்.

ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில் இருக்கும் சசி தரூருக்கு இந்த தேர்தலில் போட்டி கடுமையாக உள்ளது. அவரை எதிர்த்து பாஜக தரப்பில் முன்னாள் மிசோரம் கவர்னர் கும்மனம் ராஜசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக முன்னாள் அமைச்சர் சி. திவாகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் சசி தரூர் கூறியதாவது-

Advertisement

2014 மக்களவை தேர்தலில் மோடி அலை இருந்தது என்பதோ உண்மைதான். அதனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இந்த தேர்தலில் மோடி அலை இல்லை.

பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை மோடி ஏமாற்றி விட்டார். திருவனந்தபுரத்தில் மும்முனை போட்டி உள்ளது. இருப்பினும் சிறப்பான பிரசாரத்தால் மீண்டும் வெற்றி பெறுவோம்.

Advertisement

இவ்வாறு சசி தரூர் கூறினார்.

கேரளாவில் ஏப்ரல் 23 – அதாவது நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடக்கிறது.

Advertisement