Read in English
This Article is From Jun 19, 2020

டெல்லியில் கொரோனா அறிகுறியுள்ளவர்கள் கட்டாயம் அரசு மருத்துவ முகாம்களுக்கு செல்ல வேண்டும்!

டெல்லியை பொறுத்த அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளிலும், இதர அரசு முகாம்களிலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, எவ்வித அறிகுறியும் இல்லாதவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Advertisement
இந்தியா

டெல்லியில் 8,400 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் தற்போது வீட்டில் தனிமையில் உள்ளனர் (கோப்பு)

New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.80 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், தேசிய தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தினை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. அதே போல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 2,000ஐ நெருங்கிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் யாரும் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சரகம், டெல்லி அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

டெல்லியை பொறுத்த அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளிலும், இதர அரசு முகாம்களிலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, எவ்வித அறிகுறியும் இல்லாதவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தற்போது 8,400க்கும் அதிகமானவர்கள் டெல்லியில் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

Advertisement

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த புதிய வழிமுறையானது மேலும் சிக்கலை அதிகரிக்கச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கான தட்டுப்பாடு சமீபத்தில் அதிகரித்து வந்திருந்தது. இதனால் மத்திய உள்துறை அமைச்சர் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் நடத்திய கலந்தாலோசனைக்கு பின்னர் 500 சிறப்பு ரயில் பெட்டிகளை கொரோன சிகிச்சைக்காக வழங்கப்படுவதாக அறிவித்திருந்தார்.

இதன் பின்னர் அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என டெல்லி அரசு அறிவித்திருந்தது. ஆனால், அரசின் இந்த உத்தரவினை டெல்லி ஆளுநர் மாற்றியமைக்க வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement