Read in English
This Article is From Aug 28, 2019

பள்ளிகளில் பாலியல் கல்வி தேவையில்லை - ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பு கருத்து

பள்ளி மாணவர்கள் மனித உடலைமைப்பு பற்றித் தெரிந்து கொள்வதே அவசியம். அது ஏற்கனவே அறிவியல் பாடம் மூலம் புகட்டப்படுகிறது. இந்நிலையில் தனயாக பாலியல் கல்வி என்று ஒன்று தனியாகத் தேவையில்லை.

Advertisement
இந்தியா Translated By

பாலியல் கல்வி எங்கெல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டதோ அங்கெல்லாம் அது எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கிறது.

New Delhi:

பள்ளிகளில் பாலியல் கல்வி தேவையில்லை என ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அங்கமான சிக்‌ஷா சன்ஸ்க்ரிதி உத்தன் நியாஸ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. 

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாலியல் அத்துமீறல் என்றால் என்ன?, பெண்களை மதிப்பது எப்படி? பெண்கள் தற்காப்பு, குடும்பக் கட்டுப்பாடு, பால்வினை நோய்களைத் தடுப்பது எப்படி ? போன்றவற்றின் மீது விழிப்புணர்வு ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அங்கமான சிக்‌ஷா சன்ஸ்க்ரித் உத்தன் நியாஸ் அமைப்பின் செயலர் அதுல் கோத்தாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்கருத்து, புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை பரிந்துரைத்துள்ளபடி பள்ளிகளில் பாலியல் கல்வியை கட்டாயமாக்க வேண்டிய அவசியமில்லை. பாலுறவு என்ற வார்த்தையை பள்ளிகளில் பயன்படுத்துவதையே வன்மையாகக் கண்டிக்கிறேன். 

வேண்டுமென்றால் தேவைக்கேற்ப சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்க பள்ளிகளில் ஆலோசனை மையம் வேண்டுமானால் அமைக்கலாம். பள்ளி மாணவர்கள் மனித உடலைமைப்பு பற்றித் தெரிந்து கொள்வதே அவசியம். அது ஏற்கனவே அறிவியல் பாடம் மூலம் புகட்டப்படுகிறது. இந்நிலையில் தனயாக பாலியல் கல்வி என்று ஒன்று தனியாகத் தேவையில்லை.

Advertisement

இதுவரை பாலியல் கல்வி எங்கெல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டதோ அங்கெல்லாம் அது எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கிறது. கல்வியில் இந்தியத் தன்மை இருக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். 

Advertisement