Read in English
This Article is From Nov 03, 2018

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது: உ.பி.அமைச்சர்

உத்தர பிரதேச சரயூ நதி கரையில் ராமருக்கு 151 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்க உள்ளதாக யோகி விரைவில் அறிவிப்பார் என உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்

Advertisement
இந்தியா

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்

Lucknow :

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இந்த பூமி ராமருக்கு சொந்தமானது, இங்கு பாபர் பெயரில் எதுவும் கட்டப்படாது.

உத்தர பிரதேச சரயூ நதி கரையில் ராமருக்கு 151 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்க உள்ளதாக யோகி விரைவில் அறிவிப்பார் என உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.

ராம ஜென்மபூமி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருந்து வருகிறது. ஆதனால் நாம் எதுவும் செய்ய முடியாது. ஆனால், அயோத்தியில் ராமர் சிலை வைப்பதை யாராலும் தடுக்க முடியாது. யாராவது தடுக்க முயற்சி செய்தால் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அயோத்தி ராமருக்கு சொந்தமானது. அயோத்தி வளர்வதை யாராலும் தடுக்க முடியாது என துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும். ஆனால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அது எப்போது நடக்கும் என தேதியை சரியாக கூற முடியாது என்றார். மேலும், பாபர் பெயரில் அயோதியில் எதுவும் செய்ய முடியாது என்ற ஒன்றை மட்டும் உறுதியாக கூற முடியும் என அவர் கூறியுள்ளார்.

Advertisement

அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

Advertisement