This Article is From Jul 17, 2018

பசுவை காப்பதாக நடக்கும் வன்முறை - புதிய சட்டம் கேட்கிறது உச்ச நீதிமன்றம்

பசுவை வதையை தடுக்கிறோம் என்ற பெயரில் மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது

New Delhi:

பசுவை வதையை தடுக்கிறோம் என்ற பெயரில் மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனால் ஏற்படும் வன்முறைகளை தடுப்பது அரசின் கடமை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. “ வன்முறை ஏற்படும் போது அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ர உள்பட 3 நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது,

“ பசு காப்பாளர்கள் என்ற பேரில் வன்முறையில் ஈடுபடுபவர்களை தடுக்கவும், தீர்வு காணவும், தண்டனைக்கு உள்படுத்தவும் மத்திய அரசு சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்” என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

சமூக ஆர்வலர் தெசின் பூனேவாலே, காந்திய கொள்ளுப் பேரனான துசர் காந்தி, ஆகியோர் பசு காவலர்கள் என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளை கண்காணிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வன்முறை குறித்த நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை பின்பற்றாத சில மாநிலங்கள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் பூனேவாலே தாக்கல் செய்திருந்தார்.

மஹாராஷ்டிராவில் குழந்தை கடத்தல்காரர்கள் என்ற வாட்ஸாப் தகவலை நம்பி, பொதுமக்கள் சேர்ந்து, 5 அப்பாவிகளை தாக்கிய சம்பவத்தை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், பாதுகாப்பு என்ற பெயரில் சிலர் சட்டத்தை கையில் எடுத்து வன்முறையில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது.

.