This Article is From Apr 23, 2019

யாருக்கும் ஆதரவு இல்லை: மு.க. அழகிரி

இடைத்தேர்தலுக்குப்பின் ஆட்சி மாற்றம் வருமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்தவர். யாரை ஆதாரிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு தான் யாரையும் ஆதாரிக்கவில்லை என்று தெரிவித்தார். 

Advertisement
தமிழ்நாடு Posted by

பொதுத் தேர்தல் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18 அன்று தமிழகத்தில் நடைபெற்றது. இதில்  தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளிலும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இந்த தேர்தலுக்குப் பின் நேற்று மதுரை விமான நிலையத்திற்கு வந்திருந்த மு.க.அழகிரியிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகளை எழுப்பினர். அப்போது இடைத்தேர்தலுக்குப்பின் ஆட்சி மாற்றம் வருமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்தவர். யாரை ஆதாரிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு தான் யாரையும் ஆதாரிக்கவில்லை என்று தெரிவித்தார். 

தமிழகத்தின் மிக முக்கிய கட்சியான திமுகவிலிருந்து 2014 ஆம் ஆண்டு மு.க. அழகிரி கட்சியின் அனைத்து பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். திமுகவின் முக்கிய தலைவரான கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பின் தன்னுடைய ஆதாரவாளர்களைத் திரட்டி தன்னுடைய வலிமையை காட்ட முனைந்ததும் தோல்வியை தழுவிய நிலையில் மு.க. அழகிரி எந்தவொரு அரசியல் கருத்துகளும் தெரிவிக்காமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement