This Article is From Jan 23, 2020

CAA-க்கு எதிராக போராடுபவர்களுக்கு ஜக்கி வாசுதேவ் எச்சரிக்கை!

குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவைகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், ஜக்கி வாசுதேவ் அதனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

உள்நாட்டு மக்கள் அமைதியில்லாத சூழலில் இருக்கும் தோற்றத்தை நாங்கள் காட்ட விரும்பவில்லை - சத்குரு

Davos:

தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்களால் வெளிநாடுகளில் இந்தியாவின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் என்றும் இதனால், நாட்டிற்கு தேவையான அந்நிய முதலீடுகள் தடைபடும் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த சத்குரு ஜக்கி வாசுதேவ் என்டிடிவியிடம் கூறியதாவது, வீதிகளில் நிற்கும் பேருந்துகளுக்கு தீ வைப்பு சம்பவம் நடக்கும் இடங்களில் யாரும் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள். 

போராட்டங்களால் கவலைகளை ஏற்படுத்தாதீர்கள். ஒருசில இடங்களில் பேருந்து தீ வைப்பு சம்பவம் நடந்தாலும், அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது ஒரு சின்ன விஷயம் தான் என்றாலும், இது நாடு முழுவதும் நடைபெறவில்லை. எனினும், நாம் அதனை புறக்கணிக்க முடியாது. 

உள்நாட்டு மக்கள் அமைதியில்லாத சூழலில் இருக்கும் தோற்றத்தை நாங்கள் காட்ட விரும்பவில்லை. ஏனெனில், பெரிய அளவிலான வெளிநாட்டு முதலீடு இல்லாமல், 400 மில்லியன் மக்கள் இன்னும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கும் போது, நாட்டில் நாம் எதை அடைய விரும்பிகிறோமோ அதனை நம்மால் அடைய முடியாது. இந்தியாவில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்பதை இந்தியர்களாக நிரூபிப்பது நமது கடமையாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவைகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், ஜக்கி வாசுதேவ் அதனை கடுமையாக விமர்சித்து இவ்வாறு கூறியுள்ளார்.  முன்னதாக, சிஏஏ குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் விளக்கம் கொடுத்த வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டரில் பகிர்ந்திருந்தார். 

165 நாடுகள் மற்றும் இரண்டு பிரதேசங்கள் கொண்ட பட்டியலில், இந்தியா 51வது இடத்தை கொண்டுள்ளது. இது 10க்கு 6.9 என்ற மிகக்குறைந்த மதிப்பீடாக உள்ளது. 

சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 4.8 சதவீதமாகக் குறைத்துள்ளது, இது கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 1.3 சதவீதமாக குறைந்துள்ளது.

உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்திய பொருளாதாரத்தின் அளவைக் கருத்தில் கொண்டு, நீங்கள் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க கீழ்நோக்கிய திருத்தம் செய்தால், அது உலகளாவிய வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவு, உலக அளவிலும்கூட பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உலகளாவிய வளர்ச்சி கணிப்பை 0.1 சதவீதமாகக் குறைத்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் என்டிடிவியிடம் தெரிவித்துள்ளார். 

.