This Article is From Apr 17, 2020

விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக்கூடாது: எடப்பாடி பழனிசாமி

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்ன ஆலோசனை கூறினர்? அக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மருத்துவர்களா? இதில் ஆலோசனை சொல்ல வேண்டியவர்கள் மருத்துவர்கள். அரசியல்வாதிகள் என்ன பேச முடியும்?

விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக்கூடாது: எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக்கூடாது: எடப்பாடி பழனிசாமி

ஹைலைட்ஸ்

  • விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக்கூடாது
  • கொரோனா விஷயத்தில் ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா?
  • எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும்

விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக்கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவிய 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா நிவாரணத் தொகையான ரூ.1,000 குடும்ப அட்டைதாரர்களில் 98 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டு விட்டது. அரசு செய்த ஆர்டரின் பேரில் தமிழகத்திற்கு 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வந்துள்ளது. 1.25 லட்சம் ரேபிட் பரிசோதனைக் கருவிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் கருவிகள் இன்னும் வரவில்லை.

விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக்கூடாது. சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகளை எடுத்துச்செல்ல தடையில்லை, சர்க்கரை ஆலைகள் இயங்கவும் தடையில்லை. தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும்.

மருத்துவம் சார்ந்த கொரோனா விஷயத்தில் ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா?. மருத்துவ வல்லுநர்கள் கூறும் ஆலோசனையை அரசு ஏற்கும். எதிர்க்கட்சிகள் எந்த வகையில் ஆலோசனை கூற முடியும்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்ன ஆலோசனை கூறினர்? அக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மருத்துவர்களா? இதில் ஆலோசனை சொல்ல வேண்டியவர்கள் மருத்துவர்கள். அரசியல்வாதிகள் என்ன பேச முடியும்? மருத்துவ வல்லுநர்கள் குழு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உலக சுகாதார மையம் சொல்வதை அரசு பின்பற்றுகிறது. இதில், என்ன தவறு? வேண்டுமென்றே தங்களை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும், அரசியலாக்க வேண்டும் என்றுதான் பார்க்கிறார்கள். ஆனால், அது நடக்காது.

இக்கட்டான நேரத்தில் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள எதிர்க்கட்சியினர் முனைகிறார்கள். குறை சொல்ல இது நேரம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

.