மோடியும், இம்ரான்கான் இடையே எந்த சந்திப்பும் நடைபெறவில்லை என தகவல்
ஹைலைட்ஸ்
- மோடியும், இம்ரான்கான் இடையே எந்த சந்திப்பும் நடைபெறவில்லை என தகவல்
- தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜின்பிங்கிடன் வலியு
- பாகிஸ்தானுடம் எந்த இருதரப்பு சந்திப்பையும் இந்தியா ஏற்படுத்தவில்லை.
Bishkek:
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், அந்நாட்டு அதிபர் சூரான் பே ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருவரும் பங்கேற்ற நிலையில், இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக, இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தனி விமானம் மூலம் பாகிஸ்தான் வழியாக செல்லாமல் ஓமன், ஈரான் வான் வழியாக பிஷ்கெக் சென்றார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த மோடி, தீவிரவாத அமைப்புகள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அந்த நாட்டுடன் பேச்சு வார்த்தை தொடர முடியும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் கைகுலுக்குவதை தவிர்த்தார். மாநாட்டிற்கு வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்திக்காமல் பிரதமர் மோடி தவிர்த்தார். பிரதமர் மோடி அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து மூன்று இருக்கை தள்ளி இம்ரான் கான் அமர்ந்திருந்த போதும் அவரை சந்தித்து கை குலுக்கவில்லை.
பயங்கரவாதத்தை பாகிஸ்தான், ஆதரிப்பதால் தான் பிரதமர் மோடி இம்ரான்கானை சந்திக்காமல் தவிர்த்தார் என கூறப்படுகிறது. மேலும் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த முடியாது என சீன அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார் என தெரிகிறது.
இதேபோல், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் சந்தித்து பேசியபோது, இந்தியா வருமாறு சீன அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இதனை ஏற்று இந்தியா வருவதாக ஜிங்பிங் தெரிவித்திருக்கிறார். இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரலில் உகானில் மோடியும், ஜிங்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தயிது குறிப்பிடத்தக்கது.
With inputs from ANI and PTI