Bhopal: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஷிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது விவசாயி தனது தன்னுடைய வயல்களுக்கு நீர் பாய்ச்ச போதிய மின்சாரம் பெறுவதில் தாமதம் ஆனதால் தனக்கு மின்சார வசதி தருமாறு கூறி மாவட்ட கலெக்டர் காலில் விழுந்து மன்றாடினார்
அங்கிருந்து பார்த்தவர் எடுத்த வீடியோ காட்சியில் விவசாயி அஜித் ஜாதவ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியேறும் வேளையில் காலில் விழுந்தார். அப்போது அங்கிருந்த போலீஸ்காரர் அவரை தூக்கி விட்டு வெளியேற்றினார். பின் மாவட்ட ஆட்சியர் அங்கிருந்த எஸ்யூவி வாகனத்தில் அங்கிருந்து வெளியேறினார்.
விவசாயி உயர் மின் பம்பை இயக்குவதற்கு ஏற்ற மின்சாரம் பெறும் வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 40,000 ரூபாயை செலுத்தியிருந்தார். ஆனால் தற்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தன் வருத்தை தெரிவித்தார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அனுராக்கிடம் கேட்ட போது, “ எந்தவொரும் தாமதமும் இல்லை. விண்ணப்பித்தபின் மின்சார இணைப்புக்கான 6மாதம் ஆகவே செய்யும். இதற்கு முன் பதிவு செய்தவர்களும் உள்ளனர் என்பதால் இந்த விவசாயி காத்திருப்பு பட்டியலில் உள்ளார் என்று தெரிவித்தனர். விரைவில் மின் இணைப்பு பெறுவார் என்று NDTVயிடம் தெரிவித்தார்.