Read in English
This Article is From Nov 05, 2019

தனி நபர் ரகசியம் என்பதே கிடையாதா…? - உச்ச நீதிமன்றம் அதிருப்தி

இந்த நாட்டில் தனிநபர் ரகசியம் என்பதே கிடையாதா? ஏற்கனவே தொலைபேசி ஒட்டுகேட்பு, ஆதார் விவரங்கள் கசிந்தது, வாட்ஸ் அப் உளவு பார்த்தது என பல விஷயங்கள் நடந்து வருகிறது என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.

Advertisement
இந்தியா ,

சத்தீஷ்கரில் மூத்த போலீஸ் அதிகாரியான முகேஷ் குப்தா தொடர்ந்த வழக்கில் விசாரணையில் கூறப்பட்டது

New Delhi:

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கடும் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், நாட்டில் என்ன நடக்கிறது? தனிநபர் ரகசியம் என்பதே கிடையாதா…? என்று கேள்வி எழுப்பியுள்ளது.  

சத்தீஷ்கரில் மூத்த போலீஸ் அதிகாரியான முகேஷ் குப்தா வழக்கில் அவரது தொலைபேசியும், குடும்பத்தாரின் தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்பட்டதாகவும் இதற்கு மாநில அரசு அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, எந்த அடிப்படையில் ஒரு நபரின் அலைபேசியை அவருக்கே தெரியாமல் ஒட்டுக்கேட்க முடியும்? அலைபேசி அழைப்புகளை டேப் செய்வதற்கான முறையாக அனுமதி இருக்கிறதா? அவருக்கே தெரியாமல் ஒட்டுக்கேட்க அனுமதி தரப்பட்டது எப்படி? இதற்கு உத்தரவிட்டது யார்? என சரமாரிக் கேள்விகளை எழுப்பினர். 

மேலும் இந்த நாட்டில் தனிநபர் ரகசியம் என்பதே கிடையாதா? ஏற்கனவே தொலைபேசி ஒட்டுகேட்பு, ஆதார் விவரங்கள் கசிந்தது, வாட்ஸ் அப் உளவு பார்த்தது என பல விஷயங்கள் நடந்து வருகிறது என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.

Advertisement
Advertisement