This Article is From Jul 10, 2019

ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் செய்யும் திட்டமில்லை - பியூஸ் கோயல்

தன்னுடைய எழுத்துப்பூர்வ பதிலில் “இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை” என்றார்.

ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் செய்யும் திட்டமில்லை - பியூஸ் கோயல்

இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை (File)

இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மக்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது. 

தனியார்மயமாக்கல் தொடர்பான கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பதிலளித்தார். ரயில்வேயில் அந்நிய முதலீடு வரும் என்று அறிவிப்பு முன்கூட்டியே வந்த நிலையில் 

 இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.  ரயில்வே அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்  “இதுவரை குறிப்பிட்ட பயணிகள்  ரயில் எதுவும் தனியாரால் இயக்கப்படுவதற்கு எந்தவொரு முன்னெடுப்பும் இல்லை” என்று கூறினார். 

இருப்பினும் டெல்லி -லக்னோ வரையிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ்ஸை  தனியாருக்கானது என ரயில்வேயின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. 

துணையமைச்சர் சுரேஷ் அன்காடி “இது குறித்து மேலதிக ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும், வரும் நாட்களில் சோதனைகள் நடத்தப்படும்” என்று கூறினார். 

தன்னுடைய எழுத்துப்பூர்வ பதிலில் “இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை” என்றார். 

.