This Article is From Aug 21, 2019

ப.சிதம்பரத்திற்கு லுக்அவுட் நோட்டீஸ்! முன்ஜாமீன் கோரும் வழக்கு வெள்ளியன்று விசாரணை என தகவல்

P Chidambaram INX Media Case: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்ததைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்துள்ளனர் சிபிஐ அதிகாரிகள்

ப.சிதம்பரத்திற்கு லுக்அவுட் நோட்டீஸ்! முன்ஜாமீன் கோரும் வழக்கு வெள்ளியன்று விசாரணை என தகவல்

2 மணி நேரத்தில் தங்களை வந்து பார்க்குமாறு உத்தரவிட்டு நோட்டீஸ் ஒன்றை சிதம்பரம் வீட்டில் ஒட்டியுள்ளனர் சிபிஐ அதிகாரிகள். 

New Delhi:

INX Media case: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

INX Media case: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம், நேற்று மறுப்பு தெரிவித்துவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் சிதம்பரம் (P Chidambaram). அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றமும், அவருக்கு முன் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது. ப.சிதம்பரத்தின் மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்னர் வைக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்ததைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்துள்ளனர் சிபிஐ அதிகாரிகள். அவர்கள் சென்றபோது, சிதம்பரம் வீட்டில் இருக்கவில்லை. இதைத் தொடர்ந்து, 2 மணி நேரத்தில் தங்களை வந்து பார்க்குமாறு உத்தரவிட்டு நோட்டீஸ் ஒன்றை சிதம்பரம் வீட்டில் ஒட்டியுள்ளனர். 

கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் (P Chidambaram) இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இது குறித்த வழக்கு நீதிபதில் சுனில் கவுருக்கு முன்னர் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், “இதைப் போன்ற மிகப் பெரிய பொருளாதாரக் குற்றங்கள் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றன. எனவே, வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மனுதாரருக்கு முன் ஜாமீன் கொடுப்பது தவறான சமிக்ஞையைக் கொடுத்துவிடும்” என்று சொல்லி ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டார். 

இதைத் தொடர்ந்துதான் தெற்கு டெல்லியில் இருக்கும் ஜோர் பாக் பகுதியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு 6 சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர். அடுத்த சில மணி நேரத்தில் அமலாக்கத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிதம்பரம் வீட்டுக்கு வந்துள்ளனர். 

நேற்று நள்ளிரவு சிபிஐ தரப்பில், சிதம்பரம் வீட்டில் இது குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதையடுத்து, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கபில் சிபில் தலைமையிலான ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர் குழு, உச்ச நீதிமன்றத்தல் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. 

இந்த வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

.