ஹைலைட்ஸ்
- இந்தியப் பணக்காரர் முகேஷ் அம்பானி வருமானத்தில் எந்த மாற்றமுமில்லை
- ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் வருமானம்
- சர்வதேச பில்லியனர்கள் பட்டியலில் 19 வது இடம்
Mumbai:
மும்பை: தொடர்ந்து 10 வது ஆண்டாக இந்தியாவின் பணக்காரரான முகேஷ் அம்பானியின் வருமானத்தில் எந்த மாற்றமும் இல்லை. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானிக்கு, ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் வருமானம் பெற்று வருகிறார்.
“ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், முகேஷ் அம்பானிக்கு, 15 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் நிர்வாக நிலைகளில் இருப்பவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் வருமான தொகுப்பில் சம்பளம், சலுகைகள், இலாபம், செலுக்கத்தக்க கமிஷன் ஆகியவை அடங்கும்.
40.1 பில்லியன் டாலர்கள் மதிப்பில் சொத்து குவித்துள்ளார் முகேஷ் அம்பானி. 2018 ஆம் ஆண்டு 16.9 பில்லியன் டாலர்கள் கூடியுள்ளது. சர்வதேச பில்லியனர்கள் பட்டியலில் 2208 நபர்களில், 19 வது இடத்தை பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு 23.2 பில்லியன் டாலர்களுடன் 33 வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபோர்ப்ஸ் வணிக பத்திரிக்கையின் அறிக்கையில், சர்வதேச பில்லியனர்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து 121 நபர்களின் பெயர் இருப்பதாகவும், அதில் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருப்பதாகவும் பதிவிட்டிருந்தது.
2017 ஆம் ஆண்டின் பட்டியலில், 102 இந்தியர்கள் இருந்தனர்.
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், 112 பில்லியன் டாலர்களுடன் சர்வதேச பில்லியனர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்சின் 90 பில்லியன் டாலர்களை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.