ஒற்றை அறிவு, ஒற்றை முடிவு என்று இல்லாமல் பன்மைத்துவமாக இருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், மாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கி நிற்க கூடாது. அரசியல் பேசாமல் கல்வி, விவசாயம் முன்னேறாது, கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்து கொள்வார்கள் என்பதால்தான் அரசியலில் கறை படிந்து இருக்கிறது.
ஒற்றை அறிவு, ஒற்றை முடிவு என்று இல்லாமல் பன்மைத்துவமாக இருக்க வேண்டும். நான் ஏதோ சின்ன பசங்களுடன் பேசுவதாக சிலர் நினைக்கின்றனர். அது தவறு. பாதை நான் பேசிக் கொண்டிருப்பது நாளைய தலைவர்களிடம். அரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும் என கூறிவிட்டு வெறும் கடப்பாரையை வைத்து கொண்டு அண்ணார்ந்து பார்க்கும் கட்சியல்ல நாங்கள்.
கடப்பாரையை வைத்து உங்களுக்கான பாதையை வகுத்து வருகிறோம். அதில் நீங்கள் நடந்து வரவேண்டியது மட்டுமே பாக்கி. வாரிசு அரசியல் சரியாக இருக்காது. அதற்காக தான் ஜனநாயகம் வந்தது. ஆனால் தமிழக அரசியலில் குடும்ப அரசியலை பிரிக்க முடியாது. அதனால் தான் என் குடும்பத்தை பெரிதாக்கினேன்.
தமிழ் நடக்கும் சாலையை சுத்தமாக வைக்க வேண்டும். அடிமைத்தனம் போக நல்ல விஷயமும் நடந்திருக்கிறது. சங்கிலியை உருக்கி ஆயுதமாக மாற்றியுள்ளோம். அது தான் ஆங்கிலம். *நம் உணர்வு வரை தமிழ் வாழும். அது வளர்ந்து கொண்டே இருக்கும். அதை அசைக்க முடியாது,
எந்த மொழியையும் நான் எதிர்க்கவில்லை. மொழி என்பது குழந்தைகளின் டயபர் போன்றது. மொழி ஒரு தொடர்பியல் கருவி தான். எனவே அதை வைத்து அரசியல் செய்ய கூடாது. உணவகத்தில் நாம் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதை ஹோட்டல் நிர்வாகம் முடிவு செய்யக்கூடாது என்றார்.
நல்லதோ, தீமையோ உயரமான இடத்தில் இருந்து சொன்னால் நன்றாக கேட்கும். எனவே தப்பான ஆட்களை வைக்க கூடாது. எல்லா திட்டமும் கமிஷன் தான் படித்த கல்வியாளர்களிடம் திட்டம் இருக்கிறது. தமிழர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியவர்கள். ஏன் இஸ்ரேல் சென்று கற்றுக் கொள்ள வேண்டும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.