Read in English
This Article is From Jul 20, 2018

நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்: காங்கிரஸுக்கு பேச இவ்வளவுதான் டைம்..!

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதம் நடைபெற்று வருகிறது

Advertisement
இந்தியா ,

Highlights

  • பாஜக-வுக்கு 3 மணி நேரம் 33 நிமிடங்கள் பேச ஒதுக்கப்பட்டுள்ளது
  • பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதாக வெற்றி பெற வாய்ப்பு
  • நேர அளவு போட வேண்டாம், காங்கிரஸ்
New Delhi:

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஒவ்வொரு எதிர்கட்சிகளும் குறிப்பிட்ட நேரம் வரைதான் பேச வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

15 ஆண்டுகள் கழித்து நாடாளுமன்றத்தில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு, இன்று மாலை நடத்தப்பட உள்ளது. தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சில நாட்களுக்கு முன்னர், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த நடவடிக்கையை பாஜக தலைமையிலான அரசு தவிடுபொடியாக்க தயாராக உள்ளது. அதற்கு தனிப் பெரும்பான்மை இருக்கும் நிலையில், இன்று நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரிதாக எந்த அரசியல் திருப்பங்களும் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து உரையாடல் நாடாளுமன்றத்தில் ஆரம்பமானவுடன், நவின் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி, அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது.

இது அரசுக்கு சாதகமாக மாறியுள்ளது. ஆனால் எதிர்கட்சிகள் தரப்பில், 'இன்றைய நாள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் பொறுத்தது அல்ல. நடக்கப்போகும் உரையாடலைப் பொறுத்ததுதான்' என்று கூறியுள்ளது. மேலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பங்கேற்கவேயில்லை. நேற்று அமித்ஷா, தாக்கரேவுடன் பேசியதாகவும், அதனால் சிவசேனாவின் ஆதரவு அரசுக்கு இருக்கும் என்றும் பாஜக தெரிவித்தது. இந்நிலையில், சிவசேனா நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பங்கேற்காதது அரசுக்குப் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு இன்றைய தினம் முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

Advertisement

இன்று நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் ஆரம்பித்தவுடன், எதிர்கட்சிகளுக்கு ஒதுக்கும் நேரம் குறித்து தெரிவிக்கப்பட்டது. அதன்படி காங்கிரஸுக்கு 38 நிமிடங்களும், அதிமுக-வுக்கு 29 நிமிடங்களும், திரிணாமூல் காங்கிரஸுக்கு 27 நிமிடங்களும், பிஜு ஜனதா தளம் மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு முறையே 15 மற்றும் 9 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் பாஜக-வுக்கு 3 மணி நேரம் 33 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியபடுத்தப்பட்டது.

இதையடுத்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன் கார்கே, ‘இது மிகவும் முக்கியமான விவாதம். மக்கள் இதை கவனமாக பார்த்துக் கொண்டிருப்பர். எனவே, நேர அளவு போட வேண்டாம். நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் இது. ஆளுங்கட்சியைவிட எதிர்கட்சிக்குத்தான், பேசுவதற்கு அதிக நேரம் கொடுக்கப்பட வேண்டும்’ என்றார்.

Advertisement

இதையடுத்து பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ‘எப்படியும் நீங்கள் அதிக நேரம் தான் எடுத்துக் கொள்ளப் போறீர்கள்’ என்று பதிலளித்தார்.

Advertisement