This Article is From Jul 17, 2018

மீண்டும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும் தெலுங்கு தேசம் கட்சி

மத்திய பாஜக அரசு மீது ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தது

மீண்டும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும் தெலுங்கு தேசம் கட்சி

ஆளும் மத்திய பாஜக அரசு மீது ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ள விவகாரம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் ஆட்சியில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி, பல நாட்களாக ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி மத்திய அரசிடம் கோரிக்கை எழுப்பி வருகிறது. இதன் காரணமாக பாஜக - தெலுங்கு தேசம் கட்சிகளிடையே நீண்ட நாட்களாக மோதல் நடந்து வருகிறது.

இதனால் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டது. சிறப்பு அந்தஸ்து தருவதில் மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதால் மத்திய அமைச்சரவை உடைந்தது.

இதனையடுத்து ஆந்திர அமைச்சரவையில் இருந்து தெலுங்குதேசம் அமைச்சர்கள் ராஜினாமா செய்தார்கள். இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தது.

கடந்த கூட்டத்தொடரில் சபை சரியாக நடக்காததால்,  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாமல் போனது. இதனையடுத்து மீண்டும் வருகிற மழைக்கால கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக இன்று திமுக மாநிலங்களவை எம்பி கனிமொழி தெலுங்கு தேச கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது திமுக தெலுங்கு தேசம் கட்சியின் முடிவுகளுக்கு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சந்திரபாபு எழுதியுள்ள கடிதத்தில், அதிமுக அரசுக்கும் காவிரி விவகாரத்தில் ஏற்பட்ட அவமானத்தை உணர்ந்து அவர்களும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.