விவாதங்களுக்கு காங்., நிர்வாகிகளை அழைக்க வேண்டாம் என ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
ஹைலைட்ஸ்
- விவாதங்களுக்கு செல்ல வேண்டாம் என காங்., கேட்டுக்கொண்டுள்ளது.
- ரந்தீப் சுர்ஜிவாலா காங்கிரஸின் நிலை குறித்து டிவிட்டரில்.
- நெருக்கடிகளை சமாளிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுது.
New Delhi: தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்க ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தொலைக்காட்சி விவாதங்களில் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டு உள்ளது என பதிவிட்டுள்ளார். இதனால், ஊடங்களும் காங்கிரஸ் நிர்வாகிகளை விவாதங்களுக்கு அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று, தான் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், அவரது ராஜினாமாவை காரிய கமிட்டி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், ராகுல் தனது ராஜினாமா செய்வதான முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுலின் சொந்த தொகுதியான அமேதியிலும் எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிர்தி இரானியிடம், ராகுல் கடும் தோல்வியை சந்தித்தார். எனினும், முன்னெச்சரிக்கையாக கேரளாவின் வயநாட்டிலும் ராகுல் போட்டியிட்டதால், அங்கு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். உத்தரபிரதேசத்தில் சோனியா காந்தி போட்டியிட்ட ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸால் வெற்றி பெற முடிந்தது.
இதைத்தொடர்ந்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க அவர் கட்சிக்கு கால அவகாசம் கொடுத்தாகவும் தெரிகிறது. ராகுலின் இந்த முடிவுக்கு அவரது தாயார் சோனியா காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை ஏற்கும் மனநிலையில் காங்கிரஸின் முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது.
அவர்கள், தொடர்ந்து ராகுலை போன் மூலம் தொடர்பு கொண்டு, ‘முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்' என்று வலியுறுத்தி வருகிறார்களாம். ‘ராஜினாமா செய்ய வேண்டாம். ஆனால், கட்சியில் பல விஷயங்களை மாற்றியமைக்கலாம்' என்றும் அவர்கள் அறிவுரையும் கூறியுள்ளார்களாம்.
இதேபோல், காரிய கமிட்டி கூட்டத்தின் போது ராகுல், காந்தி குடும்பத்தில் இருந்துதான் தலைவராக ஒருவர் வர வேண்டும் என்று அவசியமில்லை என்று பேசியிருக்கிறார். காங்கிரஸ் நிர்வாகிகள், பிரியங்காவின் பெயரை முன்மொழிந்துள்ளனர். அதனால் ராகுல், தன் சகோதரி, தாயாரை இதற்குள் இழுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியதாக கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ், 17 மாநிலங்களில் ஒரு இடத்தைக் கூட ஜெயிக்கவில்லை. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநிலங்களும் இதில் அடங்கும். டிசம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இந்த மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.